திங்கள், 28 பிப்ரவரி, 2022

ஸ்டாலினுக்கு 69 வயது என்றபோது என் தாயார் நம்பவே இல்லை.. கூகுள் செய்து பார்த்தார் - ராகுல் காந்தி

M.K.Stalin 

 மாலைமலர் : தமிழ் நாடு என்பது வெறும் இரண்டு வார்த்தைகள் அல்ல... ‘உங்களின் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் பெருமிதம்
பஞ்சாப் மாநிலத்திலிருந்து 100 கிலோமீட்டர் நிலத்தை அவர்கள் ஒருதலைப்பட்சமாக பறித்து எல்லைப் பாதுகாப்பு படைக்கு கொடுத்துள்ளதாக ராகுல் காந்தி பேசினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டம் நிறைந்தது என்பதால் சுயசரிதை நூலை எழுதி உள்ளார். தமிழ்நாட்டிற்கு வருவது எனக்கு எப்போது மகிழ்ச்சியான விஷயம் தான். நாடாளுமன்றத்தில் என்னை அறியாமல் பத்திரிகையாளர்களிடம் 'நான் தமிழன்' என்று கூறினேன்.

இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்; மாநிலங்களில் இருந்தே இந்தியா என்பது வருகிறது. சுதந்திர இந்தியாவில், முதன் முறையாக மாநில உரிமைகள் நசுக்கப்படுகின்றன. ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்களை தாங்களே ஆள முடியாதவாறு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா

பஞ்சாப் மாநிலத்திலிருந்து 100 கிலோமீட்டர் நிலத்தை அவர்கள் ஒருதலைப்பட்சமாக பறித்து எல்லைப் பாதுகாப்பு படைக்கு கொடுத்துள்ளனர்.

பிரதமர் இங்கு வந்து வேறு சில கருத்துக்களை தமிழக மக்கள் மீது திணிக்க முயன்றார். ஆனால், தமிழ் நாடு என்பது 2 வார்த்தைகள் அல்ல, 3,000 ஆண்டுகள் தொன்மையானது என்பது அவருக்குப் புரியவில்லை. அவர் இந்த மாநிலத்தையும், நாட்டையும் அவமதிக்கிறார். தொன்மையானது. தமிழ்நாட்டில் 3,000 ஆண்டுகளாக வேறு எந்த கொள்கைகளையும் திணிக்க முடியவில்லை.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக