திங்கள், 31 ஜனவரி, 2022

இணையத்தில் நீலசங்கி Vs திராவிட அரக்கர் சண்டைக்கு மூல காரணி எது? அல்லது யார்

Anthony Fernando  :  தற்பொழுது நீலசங்கி Vs திராவிட அரக்கர் என்று போய்க் கொண்டிருக்கிற. சண்டைக்கு மூல காரணி என்பது யார் தெரியுமா? ?
சாட்சாத் அவனே தான்
ஆரம்பத்தில் அவன் இருந்தது திமுக கூடாரத்தில் தான்.  அவனோட கோசமே நான் தந்தை பெரியார் மற்றும் புரட்சி கவி பாரதியின் பேரன் என்று தான்..
அறிஞர் அண்ணாவை தனது தந்தை என்றான்
கலைஞரை எனது உயிர் என்றான்..
நம்ம அரக்கர்களும் அவனை ஆகோ ஒகோ என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர் ..
ஆனால் அவன் பாரதி- பெரியார் பேரன் என்று சொன்னது எனது மூளையை உறுத்திக் கொண்டே இருந்தது. பாரதியாரும் பெரியாரும் இரு வேறு துருவங்கள் ஆச்சே..
இவன் வித்தியாசமாக பேசிட்டு திரியுறானே என்றளவில் அவனை பார்த்ததில் ஒரு ஒவ்வாமை ஏற்பட்டது நம்ம அரக்கர்களுக்கு வித்தியாசமாக பேசுகிறவனை கண்டால் இருக்க முடியாதே, தூக்கி தாங்கோ தாங்கு என்று தாங்கினாங்க...
அவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை தேசிய அரசியலை பேசுகிறேன் என்ற பெயரில்  மாயாவதியை இழிவாக மட்டந்தட்டி பேச ஆரம்பித்து விட்டு கலைஞரின் பேரன் என்று திராவிட அடையாளத்தை தனக்கு முன்னே நிறுத்திக் கொண்டான்..

ஆனால் தமிழ் நாட்டு யானைகளோ அவனோட உள்நோக்கம் புரியாமல் அவன் தன்னை பாதுகாக்க தன் மேல் போர்த்திக் கொண்ட கலைஞர் அடையாளத்தை நோக்கி தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர்.  
இது போதாதா இவன் தூண்டி விட்ட நெருப்பில் திராவிட அரக்கர்கள் குதிக்க களம் களோபரமாக ஆரம்பித்தது..
இவன் கூடவே எரிகிற பங்காளி  சண்டைக்கு "அம்பேத்கரியம் தமிழகத்திற்கு தேவையற்றது" என்று எண்ணெய் ஊற்ற ஆரம்பித்தான்.  
அம்பேத்கரை இழுத்து விட. அவன் இழுத்து தெருவில் விட்ட தேரை கலைஞரின் மீதான தாக்குதலால் கடுப்பாகி இருந்த அரக்கர்கள் தாங்களே தனியாக இழுக்க ஆரம்பிக்க,
 உள்ளே நடக்கிற உள்குத்துகள் அறியாத  சிறுத்தை குட்டிகளும் அதைக் கண்டு கோதாவில் குதிக்க கூடவே ரவிக்குமார் போன்ற தற்குறிகளும் அப்பப்ப எடக்குமடக்கா வாயை திறக்க இப்பொழுது சண்டை நீலச்சங்கி திராவிட சாதிவெறி என்று வளர்ந்தது.. இவ்வளவற்றிற்கும் இடையில் இவன் சிறுத்தைகளோட முகாம்களுக்கும் சென்று அண்ணல் இந்தியாவின் விடிவெள்ளி என்று கைதட்டல் வாங்கி கொண்டிருந்தான்..

அவனோ அவனது பொருளாதார புத்தகத்தை இரண்டு பக்கமும் கடைப்பரப்பி காசாக்கி கொண்டிருந்தான். இடையிடையே இசுலாமிய தீவிரவாதத்தின் ஆபத்துகள் என்று பாடம் எடுத்துக் கொண்டிருந்தான்.
கலைஞரை கொண்டாடுவது போல் கொண்டாடிக் கொண்டே திராவிட பாரம்பரியத்தில் வந்த இரும்பு மங்கை செயா என்றதோடு கூடவே பெரியாரின் பேத்தி என்று இழுத்துக் கொண்டிருந்தான்.

இதெல்லாம் எனக்கு கறிக்குழம்பையும் பாயாசத்தையும் கலந்து அடிக்கிறது போல் இருந்தது. எனக்கு என்னமோ இவன் Crypto sanghi ஆக இருக்கனும் என்று உறுதியாக தோணிச்சு...
அவனோட பதிவில் போய் இவன் சமூக நீதிக்கு ஆதரவாக ஏதாவது எழுதி இருக்கானா என்று பார்த்தால் சுத்தம் ... ஆனால்  நேரத்திற்கு ஏற்ற மாதிரி சங்கிகளை மட்டம் தட்டுவது போல் மட்டம் தட்டி திராவிட அரக்கர்களிடம் கல்லா கட்டிக் கொண்டிருந்தான்.. சங்கிகளின் கை ஓங்க ஒங்க இவன் கொஞ்சம் கொஞ்சமாக தனது நிறத்தை மாற்ற ஆரம்பித்தான்....

NEET தேர்வை  சங்கிகள் தீவிரமாக அமுலாக்கி கொண்டிருந்த காலகட்டத்தில் இவன் காணாமல் போய் விட்டான்.. நீட் தேர்வு உறுதி என்றானவுடன் அவனது உள்ளுக்குள் இருந்த கொண்டாட்டத்தை அவனது பதிவுகளில் பார்க்க ஆரம்பித்தேன்..

ஆரம்பங்களில் கலைஞருக்கு பின்னான திமுக சனாதன வழிக்கு வந்து விடும் என்று நம்பியதால் என்னவோ தளபதியையோ, உதயநிதியையோ விமர்சனத்திற்குள்ளாக்கயதில்லை.. ஆனால் என்றைக்கு அதெல்லாம் சாத்தியமில்லை. ஆனால்  அடுத்த திராவிட தலைமுறையும் சனாதன குடுமியை அறுக்கிற வேலைகளைத் தான் செய்யும் என்றளவிலான ஏமாற்றத்துடன் இப்ப தளபதியின் மீதும் திமுக மீதும் உச்சபட்ட தாக்குதலை தொடுத்துக் கொண்டிருக்கிறான்..
அவன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்
ஆனால் அவன் தூண்டி விட்ட பங்காளிச் சண்டையோ இப்போது நீலச்சங்கி  Vs திராவிட சாதிவெறி என்று அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக