திங்கள், 31 ஜனவரி, 2022

அந்த முன்கோபம் தான் திமுகவின் பலமும் கூட. .. திருவொற்றியூர் கே.பி.சங்கர் MLA

May be an image of 1 person, standing and wrist watch

  கண்ணதாசன் :  தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை 37,661 வாக்குகளில் வென்ற திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர்.
தந்தை மிசா.கே.பரசுராமன்.
சகோதரர் கே.பி.பி.சாமி
சட்டமன்ற உறுப்பினராக,அமைச்சராக இருந்து மறைந்தவர்.
யார் எந்த உதவி கேட்டாலும் ஓடோடி சென்று உதவுபவர் திரு.சங்கர்.
அவரது பலவீனம் முன்கோபம்.
அந்த முன்கோபம் தான் திமுகவின் பலமும் கூட.
திருவொற்றியூரில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக 13 லாரிகளில் ஜல்லிக்கலவை கொண்டு வரப்பட்டது. அங்குள்ள நடராஜன் கார்டனில் உள்ள மூன்று தெருக்களில் கடந்த 27ஆம் தேதி சாலை அமைக்கும் பணிகள் நடந்தன. அப்போது அந்த இடத்துக்கு  கே.பி.சங்கர் வந்துள்ளார்.


பழைய சாலைகளை பெயர்த்து விட்டு புதிய சாலைகளை போட வேண்டும் என்று முதல்வர் உத்திரவிட்டிருக்கிறார்.ஆனால் நீங்கள்
 சாலைகளை தரமில்லாமல் போடுகிறீர்களே என்று கூறி மாநகராட்சி பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்ததாகவும் அவர் ஆதரவாளர்கள் அடித்ததாகவும் தகவல்.
அதனால் திமுகவில் பதவி இழந்து நிற்கிறார்.
ஆதரவாளர்கள் அரசு ஊழியர்களை அடித்தால் கூட அது அரசுக்கு அவமரியாதை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அண்ணன் தூத்துக்குடி பெரியசாமி அவர்களை முரட்டு பக்தன் என்று கலைஞர் அழைப்பார்.தன் படைத்தளபதிகள் வீரத்தோடு இருப்பதை ரசித்தார் கலைஞர்.
ஜெ.அன்பழகன் அவர்கள் அதே வீரத்தோடு செயல்படுபவர்.
திமுக காரன் என்றாலே தன்மானமும்,
சுயகௌரவமும்,முன் கோபமும் கூட பிறந்தவை.
நமக்கு என்ன வேதனை என்றால்,
கொலை செய்த, கொள்ளையடித்த அதிமுக காரன் தைரியமாக நடனமாடுகிறான்,
மதமாற்றம் என்று சொல்லி கட்டிங் செய்த வீடியோவை வெளியிட்டு
மதக்கலவரம் செய்ய முயன்ற சங்கிகள் தைரியமாக நடமாடுகிறார்கள்.
கோர்ட்டையே அவமதித்த எச்சை.ராஜா, பெண்களை அவமித்த
எஸ்.வி.சேகர்,ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த ஜெயக்குமார்
எந்த வித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் தைரியமாக நடமாடுகிறார்கள்.
எம்ஜிஆர் ஆட்சியில், ஜெயலலிதா ஆட்சியில் இன்னலுக்கும்,கைது  நடவடிக்கைகளுக்கும் ஆளான நமது திமுகவினர் நமது ஆட்சியிலும் தண்டனை பெறுவது ஒரு கட்சிக்காரனாய் வேதனைபடுகிறோம்.
மரங்களை வெட்டி, மனிதர்களை வெட்டி அராஜகம் செய்யும் பாமகவினர் இந்த விஷயத்தில் பொங்குவது தான் வேடிக்கையாக இருக்கிறது.
திருத்தப்பட வேண்டிய தவறு தான்
கே.பி.சங்கர் செய்திருக்கிறார்.
முதல்வராய் சட்டப்படி தண்டிக்கட்டும்.
கட்சித் தலைவராய் எங்களையும் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு கழகத்தலைவருக்கு உண்டு.
நமது இயக்கத்துக்கு கே.பி.சங்கர்,
விருகம்பாக்கம் தனசேகரன் போன்றவர்கள் தேவை..
அவர்கள் தவறை சுட்டிக் காட்டி அன்பு காட்ட வேண்டியது தலைவரின் கடமை.
எதிரிகளின் அவசியமற்ற அழுத்தங்களுக்கு, ஊதாரி ஊடகங்களின் அவதூறு பிரச்சாரத்துக்கு பணிந்து எந்த வகையிலும் திமுககாரனை விட்டுக்கொடுத்து விடக்கூடாது..
தவறு சங்கர் செய்திருந்தால் காவல்துறை முன்பு இருவரையும் அழைத்து சமாதானம் செய்து இது போன்று இனி நடக்க கூடாது என்று எச்சரித்து அனுப்புவது தான் இயல்பு.
நமது ஆட்சி நடக்கும் நேரத்தில் இந்த விஷயத்தில் மாநகராட்சி கமிஷனர் காவல்துறையில் நமது சட்டமன்ற உறுப்பினர் மீதே புகார் தெரிவித்திருப்பது தடுத்திருக்கப்பட வேண்டிய விஷயம்.
எவ்வளவு தான் நன்மை செய்தாலும் புகார் தெரிவிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது.அந்த கூட்டத்தை புறந்தள்ளி திமுககாரனை காப்பாற்ற வேண்டும் என்று  திமுக தலைவரை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
திரு.ஜெயராமன் திமுக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக