ஞாயிறு, 30 ஜனவரி, 2022

இரு மௌலவிகளின் தூண்டுதலில் இளைஞர் சுட்டு கொலை .. இஸ்லாத்தை விமர்சித்தாராம்.. குஜராத்

May be an image of 1 person, beard, outdoors and text that says 'இஸ்லாத்தை விமர்சித்த இளைஞன் 2 மௌலவிகளின் கட்டளைப்படி கொலை'

Rishvin Ismath  : அஹமதாபாத்தைச் சேர்ந்த கிஷன் பார்வத் எனும் 27 வயதான இளைஞன் இஸ்லாத்தை விமர்சித்ததற்காக இரண்டு மெளலவிகளின் கட்டளைப்படி சுட்டுக் கொல்லப் பட்டுள்ளான்.
இம்மாதம் 25 ஆம் திகதி இந்தக் கொலை நடந்து இருந்தாலும், இதுவரை இந்தக் கொலை தொடர்பில் போதிய செய்திகள் வெளியாகி இருக்கவில்லை.
இஸ்லாத்தை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக மேற்கொள்ளப் பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து கிஷன் பார்வத் இம்மாத முற்பகுதியில் கைது செய்யப்பட்டு,
பிணையில் விடுதலை செய்யப்பட்டு இருந்த நிலையிலேயே இஸ்லாமியவாதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார்.   click link thehindu youth-murder -maulavi-detained


மெளலவிகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஷபீர், இம்தியாஸ் ஆகிய இரண்டு இளைஞர்கள் இந்தக் கொலையை செய்துள்ளனர்.
ஒரு துப்பாக்கியும், 5 தோட்டாக்களும் மெளலவிகளால் கொலை செய்வதற்காக ஷபீருக்கு வழங்கப்பட்டுள்ளன. 

முஹம்மது நபியின் கேலிச் சித்திரம் அடங்கிய காணொளி ஒன்றை பகிர்ந்தமையே கொலைக்கான காரணம் என்று அறிய முடிகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக