புதன், 5 ஜனவரி, 2022

மோடியின் வருகை.. வைகோ திடீர் முடிவு எடுப்பாரா ? திசை மாறுமா தமிழக அரசியல்?

Who Is Vaiko - #vaiko | Facebook

Josephraj V | Samayam Tamil:  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென எடுத்துள்ள முடிவால் தமிழக அரசியலின் திசை மாறுமா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில், தமிழகத்துக்கு பிரதமர் மோடி வரும் போதெல்லாம் ‘கோ பேக் மோடி’ என்கின்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்ட் ஆகும்.
அந்தளவுக்கு, திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகளின் போராட்ட அடையாளங்களில் முக்கிய ஒன்றாக ‘கோ பேக் மோடி’ என்ற ஹேஷ்டேக் மாறியது.
இதில் முக்கியமாக நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி துரோகம் செய்ததாக குற்றம்சாட்டி, ‘கோ பேக் மோடி’ ஹேஷ்டேக் எதிரொலிக்கச் செய்யப்பட்டது.
ஆனால் எந்த பிரச்சனைகளுக்காக பிரதமர் மோடியை திமுக எதிர்த்து வந்ததோ அந்த பிரச்சனை இன்னமும் தீர்க்கப்படாமல் தான் உள்ளது. அதே சமயம் மோடி எதிர்ப்பு என்ற நிலை மட்டும் திமுக வட்டாரத்தில் தற்போது மிஸ் ஆகி இருக்கிறது.

இந்த சாதுர்ய முடிவு திமுகவுக்கு சாதகமாக இருந்தாலும் கூட்டணிக்கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் உள்ளிட்ட பாஜ எதிர்ப்பு மனநிலையில் இருக்கும் கட்சிகளுக்கு ஷாக்கான ஒன்றாகவே அமைந்துள்ளது.

பொதுவாக, நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக முன்னணி தலைவர்களிடம் தனிப்பட்ட முறையில் வைகோவுக்கு செல்வாக்கும் இருந்தாலும் கூட தமிழக நலன் கருதியும், திமுக தயவில் எம்.பி ஆகி இருக்கிற காரணத்தாலும் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறார்.

இந்த சூழலில், தமிழகத்தில் தற்போது திமுக தான் ஆட்சியில் உள்ளது. மதிமுகவை பொறுத்தவரை திமுகவின் தயவில் எம்.பி ஆகிவிட்டதால் வைகோ டெல்லியில் கொஞ்சம் தெம்போடு சுற்றி வருவது கட்சிக்கு உயிரோட்டமான ஒன்றாக கருதப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு வழக்கம்போல் வைகோ எதிர்ப்பு தெரிவிப்பாரா? அல்லது வரவேற்பாரா? என்கிற எதிர்பார்ப்பு நிறைந்த கேள்வி அரசியல் வானில் வட்டமடிக்கிறது.

இதற்கிடையே இன்று மதுரைக்கு வந்த மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து கூறி இருப்பது பல்வேறு கேள்விகளுக்கும், முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறது.

அதாவது, துரை வைகோ செய்தியாளர்களை கூறியதாவது:
இந்த மண்ணுக்கு எல்லா நிறமும் தேவை. எல்லா மக்களும், எல்லா சமுதாயமும் தேவை. இவர் தான் தேவை. இது தேவையில்லை என்ற கருத்து இருக்க கூடவே கூடாது.

தமிழகம் வருகிற பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளதா? என்று கேட்கிறீர்கள். கூட்டணி தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ, அது தான் எங்கள் முடிவு. இந்திய பிரதமராக தமிழகத்திற்கு மோடியை வேற்கிறோம். இவ்வாறு துரை வைகோ கூறினார்.

இதன் மூலம் கருப்பு கொடி ஏந்தும் மனநிலையில் இருந்த வைகோ திமுகவின் நெருக்கடியால் வெள்ளைக்கொடி ஏந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

மதிமுகவின் இந்த முடிவுக்கு பிரதமர் மோடி வருகை வைகோவை அடங்கி இருக்குமாறு அறிவுறுத்தி இருப்பதாக சொல்லப்படுவது தான்

ஆனால் இதுதான் சமயம் என இதையே சாக்காக வைத்துக்கொண்டு பாஜகவுடன் பழைய உறவை வைகோ புதுப்பித்துக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என, கூறப்படுவது தான் தமிழக அரசியலில் ஹாட் டாபிக்காக இருக்கிறது.

இதில் மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த தகவல் என்னவென்றால் வரும் காலங்களை தமிழக அரசு சிக்கல் இல்லாமல் கழிக்க வேண்டும் என்றால் பாஜவுடன் இணங்கி போவது தான்...சிறந்த முடிவாக இருக்கும் என திமுக வட்டாரத்திலும் கிசுகிசுக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக