ஞாயிறு, 9 ஜனவரி, 2022

தோழர் பாருக் கொலைக்கு பெரியார் இயக்கங்களும் ஒரு காரணமா?

May be an image of 1 person, beard and text

பெரியாரிய இயக்கங்கள் சிறுபான்மை ஆதரவு என்ற பெயரில் செய்யும் மடத்தனங்கள் அளவற்றது.
இஸ்லாமிய அடிப்படை வாதத்தை பெரியார் இயக்கங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை!

Thameem Tantra :   திராவிடர் விடுதலை கழகத்தை சார்ந்த பாரூக் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலையை செய்ததாக அஸ்ரத் என்பவர் கோர்ட்டில் சரணடைந்துள்ளார். பாரூக் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தீவிரமாக எதிர்த்தவர். அதை பொறுத்துகொள்ளமுடியாமல் அமைதி மார்க்கத்தின் வழியில் பாரூக்கை அல்லாஹ்விடம் பேச அனுப்பிவைத்தார் அஸ்ரத். சரி இந்த கொலைக்கு எந்த அளவு இஸ்லாமிய அடிப்படைவாதம் காரணமோ, அதே அளவு பெரியாரிய இயக்கங்களும் காரணம் என்று நான் உறுதியாக சொல்லுவேன்.
பெரியாரிய இயக்கங்கள் சிறுபான்மை ஆதரவு என்ற பெயரில் செய்யும் மடத்தனங்கள் அளவற்றது.

இந்தியநாட்டில் சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதில் எனக்கு துளியளவுகூட ஐயமில்லை...  அவர்களுக்கு ஆதரவு அவசியம் என்பதிலும் எனக்கு ஐயமில்லை ஆனால் பெரியாரிய இயக்கங்கள் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவளிக்கிறோம் என்று யாருடன் கைகோர்க்கார்களோ அவர்கள் பெண்களை மிக கேவலமாக விமர்சிக்கும் பச்சை பொறுக்கிகளாகவும்,இஸ்லாமிய பெண்களை தொடர்ந்து ஒடுக்கிவரும் அயோக்கியர்களாவும் இருக்கிறார்கள்.
உதாரணம் : பெண் விடுதலை என்று தாலி அகற்றும் போராட்டத்தில் புர்கா ஆதரவாளர் முஸ்லீம் அடிப்படைவாதி ஜவாஹிருல்லாஹ்வை மேடையில் வைத்து கொண்டு நடத்துவது !...இதை கோமாளித்தனம் என்று சொல்வதைவிட எனக்கு வேறு வார்த்தைகள் இல்லை.
இதுதான் மிகப்பெரிய பிரச்சனை. இந்துத்துவ அம்பேத்கர் புத்தகத்திற்கு குதிப்பது, பெரியார்தாசன் கோமாளித்தனமாக பெரியார் ஒரு முஸ்லீம் என்று சிடி எல்லாம் வெளியிட்டார் ..அதைப்பற்றி வாய்திறக்காமல் இருப்பது ... ! ஏனா நம்மதான் சிறுபான்மை ஆதரவாளராச்சே ...
வருத்தத்துடன் ஒன்று சொல்கிறேன் ...பெரியாரிஸ்ட்களின் இஸ்லாமிய புரிதல் எப்படி இருக்கிறது என்றால், இந்த வெளிநாட்டினர் இந்தியாவை பற்றியும் இந்துமதத்தின் சாதி அக்கரமங்கள் பற்றியும் ஒரு மண்ணும் தெரியாமல் திலகமிட்டு பூணுல் போட்டுக்கொள்வார்கள், அது போல்தான் உள்ளது. பெரியாரிஸ்ட்களுக்கு ஒன்று புரியுமா என்று தெரியவில்லை ... இஸ்லாமில் இருந்துகொண்டே பகுத்தறிவு பேசும் மக்களுக்கும், இஸ்லாமிய பெண்களுக்கும் நீங்கள் எதிர்க்கும் இந்துத்துவ கிறுக்கர்களை விட , நீங்கள் என் சிறுபான்மை சகோதரன் என்று கைகோர்க்கும் இஸ்லாமிய அடிப்படைவாத கோமாளிகளால்தான் ஆபத்து அதிகம் ! ...இதை ஒரு முன்னாள் முஸ்லிமாக, நேரடியாக பாதிக்க பட்டவனாக என்னால் உறுதியாக சொல்ல முடியும். முதலில் இந்த பாதையை மாற்றுங்கள்...
நீங்கள் இந்த அறியாமையால் உதவிசெய்கிறேன் என்ற பேரில் உபத்திரம் செய்தது மிக அதிகம் ...பகுத்தறிவாளர்கள் என்று சொல்லி கொள்ளும் நீங்களே மத அடிப்படைவாதிகளை ஒட்டுமொத்த சிறுபான்மையினரின் ரெப்ரெசென்டடிவ்வாக ஒத்துக்கொள்கிறீர்கள் ... பிறகு இந்த மதஅடிப்படைவாதிகளால் அச்சுறுத்தப்படும் ஒரு இஸ்லாமியன் எங்கு செல்வான் ? அவனால் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை எதிர்த்து எப்படி பேச முடியும் ? இஸ்லாமிய பெண்களுக்கு நீங்கள் மேலும் துன்பம் சேர்க்கிறீர்கள் ... அதில் முக்கிய பங்கு உங்கள் முத்தலாக் தடை எதிர்ப்பு (அல்லது அதை பற்றி வாயையே திறக்காமல் இருப்பது) .
உங்களுக்கு இஸ்மாமின் அடிப்படைவாத கோரமுகத்தை புரிந்துகொள்ளமுடியவில்லை அதை பற்றி படியுங்கள் ,தெரிந்துகொள்ளுங்கள் அதை விட்டுட்டு ஆதரவு என்ற பேரில் தொடர்ந்து இஸ்லாமில் இறுக்கு பிடியில் இருந்து விடுபட முற்படும் மக்களை இஸ்லாமிலேயே சிறுபான்மையினர் ஆக்குகிறீர்கள்.
நீங்கள் முற்போக்கு ப்ராஹ்மணர்களை இடைப்போட அவர்க்ளின் "இடஒதுக்கீடு,சாதி ஒழிப்பு" போன்ற பார்வைகள் எப்படி இருக்கிறது என்று ஒரு அளவு வெய்துயிருக்கிறீகள் அல்லவா ? அதே வெங்காயத்தை நீங்கள் கைகோர்க்கும் இஸ்லாமியனுடனும் வையுங்கள் . "பெண் சுதந்திரம், மத சுதந்திரம்,விமர்சன சகிப்பித்தன்மை" போன்றவற்றில் அவனது பார்வை எப்படி இருக்கிறது என்று அளவிட்டு அதை வைத்து அவனிடம் சேருங்கள்..... இல்லாட்டி நீங்கள் ஒரு ஸ்லீப்பர் செல்லுடன் சேர்ந்து இருக்குறீர்கள் என்று அர்த்தம் ...
இந்துத்துவா அடிபடைவாதம் எந்த அளவு ஆபத்தோ அதே அளவு ஆபத்து இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பதை முதலில் உணருங்கள் .... இல்லையெனில் நீங்கள் இஸ்லாமிய பெண்களையும் , இஸ்லாமில் இருந்துகொண்டே கொஞ்சம் பகுத்தறிவு பேசும் மக்களையும், பெரியாரிஸ்டுகளாக சொல்லிக்கொள்ளும் நீங்கள் நேரடியாக ஒடுக்குகிறீர்களே என்று அர்த்தமாகும் !
இஸ்லாமில் இருந்துகொண்டே அரேபிய அடிமைத்தனத்தை எதிர்ப்பவர்களை கண்டு கொள்ளுங்கள் ,அவர்களுக்கு ஆதரவு அளியுங்கள் ....அதுதான் இஸ்லாமிய சமுதாய முன்னேற்றத்திற்கு நீங்கள் செய்யும் பெரும் உதவி.
அவனவன் இஸ்லாமிய அடிப்படைவாத கோமாளிகளிடம் தப்பித்தோம் பிழைத்தோம் என்று பகுத்தறிவை நோக்கி பெரியார் திடலுக்கு வந்தா அங்கு நீங்கள் ஜவாஹிருல்லாஹ்வுடன் கட்டிபுடித்து குடும்பம் நடத்திக்கொண்டு இருக்குறீர்கள் , கடுப்பாக இருக்கிறது !
உங்களின் 'இஸ்லாமிய அடிப்படைவாத' பற்றிய மேம்போக்கான பார்வை இன்று உங்கள் இயக்கத்தின் பாரூக்கின் கழுத்தை பதம் பார்த்து இருக்கிறது என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
- Thameem Tantra

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக