திங்கள், 10 ஜனவரி, 2022

முத்தையா முரளிதரன் வேடத்தில் ஸ்லம் டோக் தேவ் படேல் .. ஆங்கிலத்திலும் வெளியாகிறது " 800" - Dev patel replacing Vijay Sethupathi in Muththia Muralidharan bio pic?

விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தேவ் படேல் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது இவர் ஸ்லாம் டாக் மில்லியனர் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பல ஆங்கில படங்களில் நடித்து உலக புகழ பெற்றவராகும் தமிழ் திரையுலகிற்கு கிடைக்க இருந்த பெருமை தற்போது ஹாலிவுட் நோக்கி செல்கிறது விஜய் சேதுபதி மீதும் முரளிதரன் மீதும் கொண்ட காழ்ப்பு உணர்ச்சியால் இந்த பாய்ச்சல் நிகழ்ந்துள்ளது இந்த படம் சரியாக படமாக்க பட்டால் பல ஆஸ்கர் விருதுகளை வாங்கி குவிக்க வாய்ப்புள்ளது தமிழர்களின் அரியவாய்ப்புக்களை எல்லாம் தட்டி கொட்டும் உலுத்தர் கூட்டங்கள் எப்போதுதான் நல்லறிவு பெறுவார்களோ?

  Mari S -  tamil.filmibeat.com : சென்னை: இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கப் போவதாக ஃபர்ஸ்ட் லுக்குடன் அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், தமிழ் இனத் துரோகியின் பயோபிக்கில் நடிகர் விஜய்சேதுபதி எப்படி நடிக்கலாம்? என அவருக்கு எதிராக கண்டனங்கள் கிளம்பின.

பிரச்சனையை வளர்க்க விரும்பாத விஜய்சேதுபதி அந்த படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில், பிரபல நடிகர் ஒருவர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

 muttaiah-muralidharan - Dev patel இந்திய சினிமா தொடங்கியதே ஹரிச்சந்திர மகாராஜாவின் பயோபிக்கில் தான். கர்ணன், கட்டபொம்மன் என ஏகப்பட்ட பயோபிக் படங்களை பார்த்து வளர்ந்த ரசிகர்கள் தற்போது விளையாட்டு வீரர்களின் பயோபிக் படங்கள் மீது ஆர்வம் கொண்டுள்ளனர். 

கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக் ஹிட் அடித்த நிலையில், ஏகப்பட்ட விளையாட்டு வீரர்கள் தங்கள் வாழ்க்கை வரலாற்றையும் படமாக உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான 83 திரைப்படம் கபில் தேவின் வாழ்க்கை வரலாறு மற்றும் இந்தியா முதல் முறையாக உலக கோப்பையை வென்ற வரலாற்றை கூறியிருந்தது.


முத்தையா முரளிதரன் -  இலங்கை அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை சாய்த்து பெரிய சாதனை படைத்துள்ளார். அதனை முன்னிலைப்படுத்தி 800 எனும் பெயரில் தனது வாழ்க்கை வரலாறு படத்தை தயாரிக்க முடிவு செய்தார். அதில், நடிகர் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

விஜய்சேதுபதி விலகல் -  800 பட டைட்டிலில் நடிகர் விஜய்சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்க ஒப்புக் கொண்டு ஃபர்ஸ்ட்லுக் எல்லாம் வெளியாகின. ஆனால், இலங்கை இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த ராஜபக்சேவிற்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இருந்து வந்த நிலையில், அவரது பயோபிக்கில் விஜய்சேதுபதி நடிக்கக் கூடாது என கண்டனங்கள் குவிந்த நிலையில், அவர் அந்த படத்தில் இருந்து விலகினார்.

விஜய்சேதுபதி விலகிய நிலையில், அவரை விட தனது பயோபிக்கிற்கு யாருமே சரியாக பொருந்த மாட்டார்கள் என நினைத்த முத்தையா முரளிதரன் தனது பயோபிக் படத்தை உருவாக்கும் முயற்சியை கடந்த 2020ம் ஆண்டே கைவிட்டார். இந்நிலையில், மறுபடியும் அந்த படம் உருவாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


தேவ் படேல் -  விஜய்சேதுபதிக்கு பதிலாக முத்தையா முரளிதரன் பயோபிக்கில் ஸ்லம்டாக் மில்லியனர் மூலம் உலகளவில் பிரபலமான நடிகர் தேவ் படேல் தான் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கிலாந்தை சேர்ந்த நடிகரான தேவ் படேல் ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் அறிமுகமானார். லயன், ஹோட்டல் மும்பை, தி க்ரீன் நைட் உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக