திங்கள், 10 ஜனவரி, 2022

60 வயது மேற்பட்டோருக்கு வீடுகளுக்கே வந்து பூஸ்டர் தடுப்பூசி!

 நக்கீரன் செய்திப்பிரிவு  : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10/01/2022) சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுகாதார பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை பூஸ்டர் தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், அரசு முதன்மைச் செயலாளர்/ பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு முன்னெச்சரிக்கை பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மாநகராட்சியின் சார்பில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, இணைநோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் 1913, 044- 2538 4520 மற்றும் 044- 4612 2300 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களுடைய விவரங்களைப் பதிவு செய்தால், அவர்களின் இல்லங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்.

மேலும், 60 வயதைக் கடந்த முதல் தவணை தடுப்பூசி செலுத்தாத நபர்கள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்த வேண்டிய நாட்களைக் கடந்த நபர்களும் இந்த எண்களில் தொடர்புக் கொண்டு பதிவு செய்தால், அவர்களுக்கும் இல்லங்களிலேயே கோவிட் தடுப்பூசி செலுத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

1 கருத்து:

  1. இது மனித உரிமை மீறல்கள்... எங்கள் மருத்துவம் நாங்கள் தான் முடுவுசெய்ய வேண்டும்...அறம் அற்ற செயல்...இது... பாதிப்புகளுக்கு அரசு பொறுப்பேற்குமா?

    பதிலளிநீக்கு