செவ்வாய், 7 டிசம்பர், 2021

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கால்கள் எடுக்கப்பட்டதா? எப்போது? சமூகவலை லீக்ஸ்

 Chozha Rajan  :  ஜெயலலிதாவின் கலக்கத்துக்குக் காரணம் இருந்தது. 2014 மக்களவைத் தேர்தலில் இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக தன்னை அறிமுகப்படுத்தி, பணத்தை வாரியிறைத்து 39 தொகுதிகளை கைப்பற்றினார் ஜெயலலிதா. ஆனால், கூட்டணி அரசு அமைந்தால் தன்மீதான வழக்குகளை நீர்த்துப்போக செய்யலாம் என்ற அவருடைய ஆசை நிராசையானது. பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மை பெற்று மோடி தலைமையில் அரசு அமைத்தது.
இந்நிலையில்தான், பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 14 ஆம் தேதி தீர்ப்பு என்று நீதிபதி குன்ஹா அறிவித்தார். தீர்ப்பின்போது, ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தார். முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது தோழியுடனும் மற்ற இருவருடனும் நீதிமன்றம் சென்றார்.
அங்கு நீதிபதி அளித்த தீர்ப்பு அவருக்கு எதிராக அமைந்தது. அதுமட்டுமின்றி உடனடியாக ஜெயலலிதா உள்ளிட்டோரை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார். இது இந்தியா முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊழல் வழக்கில் பல முறை பதவியிழந்த முதல்வர், முதல் முறையாக சிறைத்தண்டனை பெற்ற முதல்வர் என்ற பெயரை ஜெயலலிதா பெற்றார்.

சிறையில் அடைக்கப்பட்ட பிறகுதான் ஜெயலலிதாவின் உண்மையான உடல் பிரச்சனைகள் தெரியவந்தன. அவருக்கு கால்கள் எடுக்கப்பட்டிருந்தன. அவரால் தனித்து இயங்கவே முடியாத நிலை இருந்தது. இதெல்லாம் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தெரியவந்ததும் துடித்துப் போனார்கள்.
அவரை எப்படியும் விடுதலை செய்ய மிகப்பெரிய பேரம் பேசப்பட்டதாக தகவல்கள் கசிந்தன. நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு அசைக்க முடியாத ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருந்தது. அப்பீலில் எதுவும் செய்ய முடியாது என்று தெரியவந்தது. எனவே, குமாரசாமி என்ற நீதிபதியை நியமித்தார்கள். அவர் இந்த அப்பீலை உடனடியாக விசாரணைக்கு எடுத்து, உடனடியாக தீர்ப்பை வழங்கினார்.
ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்கிறேன் என்று ஒரே வரியில் அவருடைய தீர்ப்பு இருந்தது. அந்தத் தீர்ப்பை வாசித்த நீதித்துறையே திகைத்துப் போனது. நீதிபதியின் கணக்கே குளறுபடியாக இருந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது.
இருந்தாலும் தீர்ப்பு வெளியானவுடன் நிரபராதி என்ற தோற்றத்துடன் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். பெங்களூருவிலிருந்து சென்னைவரை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். ஊடகங்கள் நேரலை செய்தன.
ஒரு ஊழல் குற்றவாளியை கொஞ்சம்கூட கூச்சமின்றி வானளாவ புகழ்ந்து வர்ணித்தன. ஜெயலலிதா வீட்டுக்கு வந்தவுடன் அவரை பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் சந்தித்தனர். அப்போது அவர்களுக்குள் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. ஆனால், குன்ஹாவின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வார்கள். அந்த அப்பீல் ஜெயலலிதாவுக்கு தண்டனை பெற்றுத்தரும் என்று உறுதியாக கூறியிருக்கலாம். அப்பீல் விசாரணையை இயன்றவரைதான் தள்ளி வைக்க முடியும். விசாரணை முடிந்தாலும் தீர்ப்பையும் குறிப்பிட்ட காலம்தான் ஒத்திவைக்க முடியும். அதற்குள் ஜெயலலிதா கவுரவமாக செத்துப் போக வேண்டும் என்றுதான் அவர்கள் பேசியிருக்கலாம் என்று போயஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்தன.
இந்நிலையில்தான் 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் வந்தது. இந்தத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடுவது என்றும், திமுகவுடன் எந்த கட்சியையும் கூட்டணி அமைக்காமல் பார்த்துக் கொள்வது என்றும் ஜெயலலிதா திட்டமிட்டார்.
(நான் எழுதிய உதயநிதி ஸ்டாலின் புத்தகத்தில்...)

செம்பாக்கம் ஜெய்குமார்  :  சாவுக்கு முன்னமே கால்கள் இல்லையா...!!!!

Chozha Rajan   :  கொடநாடு எஸ்டேட்டிலிருந்து ஆட்சி நடத்தினாரே அப்போவே எடுக்கப்பட்டிருக்கலாம். அங்கிருந்து திரும்பிய பிறகு அவர் சரியாக நடக்கவே இல்லை
        
Kmrkmr Kumar   :  கால் இல்லை விரல்கள்!!
   ·
Chozha Rajan  :   அது 15 வருஷத்துக்கு முந்தி...

Tha Mu  :  கால் விரல் எடுக்கப்பட்டது..

Chozha Rajan  :   15 ஆண்டுகளுக்கு முன்னரே அது நடந்துவிட்டது. அப்போலோவில் கடைசியாக ஜூஸ் சாப்பிடும் போட்டோவில் செயற்கை காலுடன் இருந்ததை பார்க்கலாம். கொடநாட்டில் அரசாங்கம் நடத்திபோதே அவர் கால்கள் எடுக்கப்பட்டன. நகர்ந்து நகர்ந்தே வந்தார். 20 நிமிடங்களுக்கு மேல் எங்கும் அமர முடியாது. கோரஸாக பதவி ஏற்றதும் அதனால்தான். அவருக்கு கால்கள் இல்லை என்பதை அறிந்ததால்தான், சசிகலா புஷ்பா எம்.பி. துணிச்சலாக தலைமையை எதிர்த்தார். அவரை எதுவும் செய்ய முடியவில்லை...

Tha Mu  :   ஓ...அப்படியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக