வியாழன், 16 டிசம்பர், 2021

சோனியா அகர்வால் செல்வராகவனோடு திருமணம் - விவாகரத்து .. மீண்டும் திரையுலக கனவு பலிக்குமா?

Sonia Agarwal Photos : Pictures, Latest Images, Stills Of Sonia Agarwal, Hd  Photos - Infoflick

சிவா - cinemapettai.com : : சினிமா உலகில் முன்னணியில் இருக்கும் ஒரு நடிகை பல வருடங்களாக தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு சுலபம் இல்லை. அவர்களில் திரிஷா, நயன்தாரா போன்ற சில நடிகைகளே பல வருடங்கள் கடந்தும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகின்றனர்.
அதில் சில நடிகைகள் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தும் திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்தால் சினிமாவை விட்டு ஒதுக்கப்பட்டு இருக்கின்றனர். அப்படி ஒரு நடிகையை பற்றி இப்போது காண்போம்.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். இந்த படத்தில் அவர் நடிகர் தனுஷுக்கு இணையாக அற்புதமாக நடித்திருந்தார். இதற்காக பல விருதுகளையும் அவர் பெற்றார்.

இந்த படத்தை தொடர்ந்து கோவில், மதுர, 7ஜி ரெயின்போ காலனி என்று அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பொழுதே இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன்பிறகு சோனியா அகர்வால் எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் குடும்ப பொறுப்பை ஏற்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவருடைய குடும்ப வாழ்க்கை அதிக நாள் நீடிக்கவில்லை. இருவருக்கும் ஏற்பட்ட மன வருத்தத்தின் காரணமாக சோனியா அகர்வால் விவாகரத்து பெற்று செல்வராகவனை விட்டுப் பிரிந்தார்.

தற்போது செல்வராகவன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார் ஆனால் சோனியா அகர்வால் வேறு திருமணம் செய்து கொள்ளாமல் மீண்டும் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வந்தார். முன்புபோல் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

திருமணம் ஆனால் சினிமாவில் மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்று அவருக்கு நெருக்கமான சிலர் கூறியுள்ளார்கள். முதலில் அது போன்றே நடந்துள்ளது. ஆனால் தன் திறமையின் மூலம் அவர் படிப்படியாக முன்னேறியுள்ளார். தற்போது தமிழ், மலையாளம் என்று பல திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார். அதோடு பின்னணி பாடகியாகவும் ஒரு திரைப்படத்தில் அறிமுகமாக இருக்கிறார்.

இவரைப் போன்றே நடிகை தேவயானியும் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே இயக்குநர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். அதனால் பல திரைப்படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தற்போது அவர் பெரிய திரையை விடுத்து சின்னத்திரை பக்கம் திரும்பி விட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக