வியாழன், 16 டிசம்பர், 2021

நடிகர் பப்லு பிரித்விராஜ் உடல் பயிற்சி கூட்டத்தில் மயிரிழையில் உயிர்தப்பினார் .. காணொளி

 V Vasanthi -  Oneindia Tamil  : சென்னை: உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்யும் போது நொடிப்பொழுதில் பிரித்திவிராஜ் உயிர் தப்பியுள்ளார்.
வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் பதறிப்போய் உள்ளனர்.
கவலைப்பட வேண்டாம் தனக்கு ஒன்றும் இல்லை என்று ரசிகர்களுக்கு பப்லு ஆறுதல் கூறியுள்ளார். பப்லுவாக மாறிய பிரித்விராஜ் பப்லுவாக மாறிய பிரித்விராஜ் பப்லு பிரித்திவிராஜ் ஒரு இந்திய நடிகராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் குணச்சித்திர வேடங்களிலும் எடுத்துக்கொண்டிருக்கிறார்.


பிரித்திவிராஜ் குழந்தை நடிகராக அறிமுகமாகி நான் வாழவைப்பேன் பின்னும் திரைப்படங்களில் பப்லு என்னும் பெயரில் நடித்ததால் தற்போது வரைக்கும் அவரை பல என்று ரசிகர்கள் பப்லு என்று அழைத்து வருகின்றனர்.
1980களில் கே. பாலச்சந்தர் இயக்கிய வானமே எல்லை படத்தில் நடிப்பதற்கு முன்பு ஒருசில குறைந்தபட்சக் மலையாள திரைப்படங்களில் நடித்து மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

டிவி சீரியல்களில் நடிப்பதற்கு முன்பு வரைக்கும் ஒரு சில திரைப்படங்களிலும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து இருந்தார்.
அவர் நடித்து மிகவும் பெயர் வாங்கிய திரைப்படங்களில் அவள் வருவாளா திரைப்படம் ஒன்று.
இந்த திரைப்படத்தில் இவருடைய கேரக்டர் அதிகமாக ரசிகர்களை ரசிக்க வைத்துவிட்டது.
பல ரசிகர்கள் இவரை திட்டி தீர்த்தாலும் இவர் இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியாக அதனை பார்த்து வந்தார்.

திரைப்பட வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் இரண்டாவது சீசனில் ஜோடி நம்பர் 1 என்ற டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சிலம்பரசனுக்கு இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பெரிய அளவில் வைரல் ஆகியது. அதற்குப் பிறகுதான் இவர் வாணி ராணி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த சீரியல் முடிவடைந்த பிறகு இவர் மலேசியாவிற்கு சென்றுவிட்டார். அங்கே சென்று திரும்பிய பிறகு சென்னையில் பெசன்ட் நகரில் ரிபப்ளிக் என்ற டீ ஷாப் தொடங்கியுள்ளார்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே எனும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருந்தவர் ஒரு தீவிரமான உடற்பயிற்சியாளர் இளம் கதாநாயகிகளுக்கு டப் கொடுக்கிற மாதிரி தான் தற்போது வரைக்கும் இவர் உடம்பை ஏற்றி கொண்டிருக்கிறார். கண்ணான கண்ணே சீரியலில் அப்பா கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தாலும் தன்னுடைய கட்டுக்கோப்பான உடலை பேணிக்காப்பதில் இவர் வல்லவராக இருந்து வருகிறார்.

தற்போது உடற்பயிற்சி கூடத்தில் இவர் வழக்கம்போல உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக பயிற்சியாளரின் கவனக்குறைவால் வெயிட் இவர் கழுத்தில் விழுந்துவிட்டது. நொடிப்பொழுதில் இவர் உயிர்தப்பிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் பலர் ஃபீல் பண்ணி கொண்டு இருக்கும்போது யாரும்  பயப்பட வேண்டாம் நான் நன்றாக இருக்கிறேன் என்று ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக