Rajkumar R - Oneindia Tamil : சேலம்: திமுக ஆட்சிக்கு வந்த 7 மாதங்களில் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும், திமுக ஆட்சிக் காலத்தில் சுமார் 6ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்று வருவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
ஆலோசனைக் பிறகு மாவட்ட கழக வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக திமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும், மக்களை திசைதிருப்ப அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது புகார்கள் தெரிவிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சிதான் எனக்கூறிய எடப்பாடி பழனிசாமி, திமுகவைச் சார்ந்த 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது ஏராளமான ஊழல் வழக்குகள் மற்றும் புகர்கள் உள்ளதாகவும், நிலுவையில் உள்ள வழக்குகள் மிது எந்த நடவடிக்கையும் எடுக்காத லஞ்சஒழிப்புத்துறை அதிமுகவை மட்டும் குறிவைத்து செயல்படுவதாகவும் கூறினார். மேலும் தமிழகத்தில் எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது எனக் கூறிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த ஏழு மாதங்களுக்குள்ளாகவே சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் பல்வேரு துறைகளில் ஊழல் நடைபெற்று
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, திமுக சார்பில் 525 வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட நிலையில் சில வாக்குறுதிகளை தவிர பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும், குறிப்பாக ந்ட் தேர்வை அத்து செய்தல், முதியோர் மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை உயர்வு, குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 5 ஆயிரம் உதவித் தொகை ஆகியவ்ற்றை நிறைவேற்றாததால். மக்களை திசைதிருப்பும் வகையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்துவதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சோதனைகள் மூலமும் பழிவாங்கும் நடவடிக்கைகளின் மூலம் அதிமுகவை அசைத்து விட முடியாது எனவும், போலிசாரால் போடப்பட்டுள்ள வழக்குகளை சட்டரீதியாக சந்திப்போம் எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, பொய்யான வாக்குறுதிகளை அளித்து கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்த திமுக அதிமுக கொண்டு வந்த திட்டங்களை முடக்கி வருகிறார்கள்.நாட்டு மக்களைப் பற்றி எந்த கவலையும் திமுக அரசுக்கு இல்லை என கூறினார்.வந்த திமுக சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையை மறைப்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறது எனவும்ஜ், அதிமுகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள திராணியற்ற திமுக அரசு மக்களை திசை திருப்பும் வகையில் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் ரெய்டு நடத்தி வருகிறது என்றார்.
வருகின்ற 17ஆம் தேதி அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், அந்த போரட்டம் மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி விடும் என எண்ணி, அதனை முடக்குவதற்காக இதுபொன்ர ரெய்டுகளை நடத்துவதாகவும், மிகப்பெரிய தொண்டர் பலத்தை கொண்ட அதிமுக அதனை கண்டு அஞ்சாது எனவும், திட்டமிட்டபடி பொராட்டம் நடைபெறும் எனவும், பெட்ரோல் டீசல் விலைகுறைக்கப்படும் என வாக்குறுதி அளித்து விட்டு பெட்ரோலுக்கு மட்டும் சிறிதளவு விலை குறைத்த நிலையில் டீசலுக்கு குறைக்கவேயில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக