ஞாயிறு, 7 நவம்பர், 2021

ரஞ்சித்துகளும், மாரி செல்வராஜ்களும், ஞானவேல்களும் பிச்சை காசுகளுக்காக தமிழ்நாட்டை மீண்டும் ஜாதிய போர்க்களமாக மாற்ற கூடாது

May be an image of 1 person and text

Kandasamy Mariyappan  :  நேற்று ஜெய் பீம் பற்றிய எனது பதிவை தொடர்ந்து சில நண்பர்கள், எனது பார்வை சரி என்றும் சிலர் தவறு என்றும் கூறினர்.
மகிழ்ச்சி.
எனது எண்ணம் போன்று மற்றவர்களின் சிந்தனை இருக்க வேண்டும் என்று நான் எண்ணினால்.., எனக்கு உறவுகளே இருக்காது.!
ஆனாலும், நேற்று மாலை, தோழர். கோவிந்தன் (((வன்னியர்))) பேட்டி அளித்த Video பார்த்தேன்.
1. கொலை செய்யப் பட்டவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.
2. கொலை செய்தவர் ஆரோக்கியசாமி (((கிறித்துவர்))) என்ற மதம் மாறிய தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.!
குருமூர்த்தி (((வன்னியர்))) இல்லை.!
3. இந்தக் கொலையை எதிர்த்து சமூக போராட்டம் செய்தவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த தோழர். திரு. கோவிந்தன் என்ற வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.!


4. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தவர் கம்யூனிஸ்ட் இயக்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் (((வன்னியர்))).
5. அவர்களுக்காக இந்த வழக்கை எடுத்து நடத்தியவர் திரு. சந்துரு என்ற பார்ப்பண சமூகத்தைச் சேர்ந்தவர் என்று எண்ணுகிறேன்.
ஆனால் வணிக லாபம் மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் ரஞ்சித்துகளும், ஞானவேல்களும், மாரி செல்வராஜ்களும்...,
சமூகத்தில் பிரச்சினைகளை உருவாக்கும் விதமாக, உயர்சாதி மக்கள் எல்லோருமே தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை இன்றும் கேவலமாக நடத்துவது போன்று தங்களுடைய சினிமாவில் காண்பிப்பதுதான் தவறு எண்கிறேன்.!
This will create social unrest.!
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எந்த ஒரு சமூக போராட்டத்தையும் எடுக்காமல்..,
உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர், எங்களை RSSதான் காப்பாற்றியது என்று பல பதக்கங்களுடன் சொகுசு பங்களாவில் வாழ்கிறார்.
கம்யூனிச, திராவிட இயக்க போராட்டங்களின் மூலமாக தங்களுடைய வாழ்க்கயை நல்ல முறையில் அமைத்துக் கொண்ட பல தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் Audi, BMW, Benz car, சொகுசு பங்களா என்ற வாழக்கையை கொண்டுள்ளனர்.!
உண்மை நிகழ்வு என்று ஜெய்பீம், கர்ணன் என்ற வணிக லாப நோக்கத்திற்காக கதையை மாற்றி சொல்லி, சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி நல்ல லாபம் பார்த்தவர்கள் சொகுசான வாழ்க்கையை கொண்டுள்ளனர்.
ஆனால்...,
கம்யூனிசத் தோழர் கோவிந்தன் வன்னியர், இந்த வழக்குக்காவே 39 வயது வரையிலும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று வாழ்ந்தார் என்று எண்ணும் பொழுதும், அவர் வாழும் வீட்டை பார்க்கும் பொழுதும் உண்மையில் கண்ணீர் வருகிறது.!
தோழர் கோவிந்தன்  (((வன்னியர்))) மட்டுமல்ல...
பிள்ளை, முதலியார், வேளாளர், முக்குலத்தோர், அய்யர், அய்யங்கார், நாடார், கோனார் சமூகங்களைச் சேர்ந்த பல கம்யூனிச தோழர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தங்களுடைய வாழ்க்கையை தியாகம் செய்துள்ளனர்.
மீண்டும் கூறுகிறேன்..,
கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சாதிய ஒடுக்குமுறை குறைந்துள்ளது. சாதிய பார்வையில், மிகப்பெரிய அளவில் ஒரு நெகிழ்வுத் தன்மை ஏற்பட்டுள்ளது.!
ரஞ்சித்துகளும், மாரி செல்வராஜ்களும், ஞானவேல்களும்..,
சில வலதுசாரிகள் போடும் பிச்சை காசுகளுக்காக, சமூகத்தில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்டை மீண்டும் சாதிய சண்டை போர்க்களமாக மாற்றாமல் இருப்பதே நல்லது.!!
தயவுசெய்து..,
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களிடையே நேர்மறை எண்ணங்களை வளர்க்க பாடுபடுங்கள்.!
தங்களுடைய சமூக வளர்ச்சிக்காக பாடுபட கற்றுக் கொடுங்கள்.!
அதுவே நீங்கள் அந்த சமூகத்திற்கு செய்யும் சேவையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக