புதன், 17 நவம்பர், 2021

அதிரடியாக குறைக்கப்பட்ட உச்ச நட்சத்திரத்தின் சம்பளம்.. எல்லாத்துக்கும் காரணம் அது தானாம்

Annaatthe Box Office: The Rajinikanth Starrer Collects 225 Crores In 12  Days! - Filmibeat

  staff -  tamil.filmibeat.com :  சென்னை: ஒரு வாரத்தில் ஓஹோன்னு வந்த வசூல் அடுத்த வாரத்தில் அதள பாதளத்திற்கு சென்றதன் விளைவை அடுத்த படத்தில் அனுபவிக்க போகிறாராம் அந்த உச்ச நட்சத்திரம்.
ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியும் அடுத்த படத்தை உடனடியாக ஆரம்பிக்க உத்வேகமாக கிளம்பியவருக்கு தயாரிப்பு தரப்பு இப்படியொரு செக் வைத்ததை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லையாம். கிடைத்தது போதும் என ஓகே சொல்லி நடிக்கலாமா?
இல்லை வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தை அணுகலாமா என்கிற யோசனையில் இருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.
பல வருடங்களாக சொதப்பல்..  பிரம்மாண்டத்துடன் இணைந்து உச்ச நட்சத்திரம் நடித்த அந்த படத்திற்கு பிறகு அவர் கடந்த 10 ஆண்டுகளாக நடித்து வரும் அத்தனை படங்களும் சொதப்பலாகவே அமைந்து வருவதாக மிகப்பெரிய குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.


அதிலும், கடந்த சில படங்கள் ரொம்பவே பொறுமையை சோதிப்பதாக உள்ளதாக பலரும் புலம்பித் தீர்த்து வருகின்றனர்.
வழியில்லாமல் கொண்டாட்டம்...  பல நூறு கோடிகளை கொட்டி உச்ச நட்சத்திரத்தை வைத்து படம் எடுத்த தயாரிப்பு நிறுவனமோ வேறு வழியில்லாமல் படம் வேற லெவல் என ஆடிய கொண்டாட்டங்கள் எல்லாம் தற்போது அடுத்தடுத்த வாரங்களில் படம் சறுக்கியதும் அப்படியே நின்று போய் விட்டன.

பில்டப் பண்ணியே பெரியாளாக மாறிவிடலாம் என உச்ச நட்சத்திரத்துக்கு ஏற்ற கதையை பண்ணாமல் ஏகப்பட்ட சொந்த படங்களின் காப்பி படமாக இந்த படத்தை உருவாக்கி மீண்டும் ஒரு சொதப்பல் படத்தை கொடுக்க வைத்து விட்டார் என உச்ச நட்சத்திரம் பயங்கர கடுப்பில் இருக்கிறாராம்.

 தெறித்து ஓடும் இயக்குநர்கள்..  நல்ல படங்களை இயக்கி வரும் இளம் இயக்குநர்கள் உச்ச நட்சத்திரம் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும் வேண்டாம் சாமி என தெறித்து ஓடி வர ஏகப்பட்ட காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக பட்ஜெட் பிரச்சனை தான் என்றும் படப்பிடிப்பை குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் முடிக்க முடியாமல் போகும் சூழ்நிலை இருப்பதாலும் அவர்கள் மறுத்து வருகின்றனர்.

குறைந்தது வசூல்...  ஆரம்பத்தில் ஏகப்பட்ட கோடிகள் என கணக்கு சொல்லி வந்த தயாரிப்பு நிறுவனம் நாள் ஆக ஆக என்னத்த சொல்ல என கப்சிப் ஆகி உள்ளது. இளம் மாஸ் நடிகரின் சமீபத்திய படம் பெற்ற வசூல் கூட பல இடங்களில் வரவில்லை என்பது தான் உண்மையான ரிப்போர்ட் என்கின்றனர்.

அடுத்த படத்தையும் அதே நிறுவனமே தயாரிக்க முடிவெடுத்துள்ள நிலையில், உச்ச நடிகரிடம் ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவசர அவசரமாக படத்தை ஆரம்பிக்கும் சூழல் இருப்பதால் கிடைத்த இயக்குநரை வைத்து படம் எடுக்கப் போவதாகவும் தகவல் கசிந்துள்ளது. அதிரடியாக

அதிரடியாக குறைந்த சம்பளம்..   இந்நிலையில் நடிகரின் சம்பளத்தில் அதிகப்படியாக 30 சதவீதத்தை குறைத்துக் கொள்ளுமாறு அதிரடியாக கூறி விட்டதாம் தயாரிப்பு நிறுவனம். ஏற்கனவே வெளியான படம் நினைத்த அளவுக்கு லாபத்தை ஈட்டித் தரவில்லை. அதனால், அடுத்த படத்திற்கு அதிக பட்ஜெட் ஒதுக்க முடியாது என கறாராக கூறி விட்டார்களாம்.

ஓகே சொல்வாரா..  நடிகர்களை பொறுத்தவரையில் அடுத்த அடுத்த படங்களுக்கு தங்களின் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போவது தான் வழக்கம். அதிலும், தன்னை விட இளம் நடிகர்கள் எல்லாம் தனக்கு ஈடாக சம்பளம் வாங்கி வரும் சூழலில் 30 சதவீத சம்பளத்தை குறைத்து நடிக்கலாமா? அல்லது வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்கு படம் பண்ணலாமா? என்கிற பலத்த யோசனையில் உச்ச நட்சத்திரம் மூழ்கி உள்ளாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக