வெள்ளி, 12 நவம்பர், 2021

ஹார்லிக்ஸ் விளம்பர பாணி .. காகித புலி எம் பி ஏக்களின் அலப்பறைகள்

May be an image of 4 people and text that says 'WHEN DID YOU GROW UP? Lnttte MILK WHEAT VITAMINS orlicks nourishing beverage efer pack details. be taken spart of regular'

RS Prabu  :  இந்த இரண்டு ad film-களுமே நிச்சயமாக MBA படித்த நபர்களை வைத்துதான் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
கரண்டி, கத்தி, திருப்புளி, வீல் ஸ்பேனர் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சரியாகப் பிடிக்கவில்லை என்றால் efficiency குறையும் என்பதைவிட அது ஒரு serious safety hazard. கழண்டு வந்து நம் மீதே அடிக்கும் அல்லது பக்கத்தில் இருப்பவரைப் பதம் பார்க்கும். சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தாகவும் முடியலாம்.
வேலை செய்து கொண்டிருக்கும் ஒருவருக்கு உதவியாளராக நின்று பொருட்களை எடுத்துக் கொடுக்கும்போது அதை சரியாகக் கைக்குக் கொடுக்க வேண்டும். திருப்புளியைக் கேட்டால் கைப்பிடியை நம் கையில் பிடித்துக்கொண்டு கம்பியை நீட்டக்கூடாது. நல்ல மாஸ்டராக இருந்தால் அப்படியே கம்பியைப் பிடித்து அந்த கைப்பிடியாலேயே ஒரு சாத்து சாத்துவார்கள்.


அந்த ஹார்லிக்ஸ் விளம்பரத்தை இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகள், சுவர்கள், செய்தித்தாள், தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலமாகக் கொண்டு சேர்த்தார்கள். அதை எடுத்த விளம்பர நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கமிட்டியில் ஒரு பயலும் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை கூட பஞ்சரான டயரைக் கழட்டி ஸ்டெப்னி மாட்டியதில்லை என்று இதைப் பார்த்தாலே தெரிகிறது.
குறைந்தபட்சம் அவர்களது கார், வேன்  ஓட்டுநர்களிடம் காட்டி கேட்டிருந்தால் அப்போதே சொல்லியிருப்பார்கள். சைக்கிள் டயரைக் கூட அந்த பெண் லீவரைப் பிடித்திருப்பது மாதிரி பிடித்துக் கழட்டி மாட்ட முடியாது.
ஒரு சோப்பு கம்பெனியில் சோப்பு இல்லாத காலி டப்பாக்கள் மட்டுமே வந்ததாக வாடிக்கையாளர்களிடம் இருந்து நிறைய புகார்கள் வந்ததாம் கதை, ஒரு கார் கம்பெனில வெளியில் இருக்கும் கதவின் உயரத்தைக் கவனிக்காமல் காரைத் தயாரித்துவிட்டு அதை வெளியில் எடுக்க முடியாமல் தடுமாறி நின்றபோது டயரில் காற்றைப் பிடுங்க வாட்ச்மேன் சொன்ன யோசனை கதைகள் மாதிரி நிறைய MBA ஓலா கதைகள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் அடிப்படை விசயத்திலேயே கோட்டை விடுவார்கள்.
அண்ணாமலை அடிப்படையில் ஒரு பொறியாளர். MBA படிப்பெல்லாம் படித்திருக்கிறார். என்னதான் போலீஸ் டிரெயினிங் எடுத்திருந்தாலும் உடல் தசைகளின் இயங்குதன்மையை மாற்ற முடியாது. இருந்தாலும் ஒன்பது கெரகங்களும் உச்சத்தில் இருக்கப் பெற்றவர் என்பதால் அவர் எப்படி வேண்டுமானாலும் பிடித்துக் கிண்டலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக