வெள்ளி, 12 நவம்பர், 2021

ஆப்கானில் 600 ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது – தாலிபான்கள் அறிவிப்பு.!

 Matale News  :  ஆப்கானில் 600 ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது – தாலிபான்கள் அறிவிப்பு.!
ஆப்கானிஸ்தானில் கடந்த மூன்று மாதங்களில் 600 ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது அங்கு ஆட்சியை கைப்பற்றியிருக்கும் தாலிபான்கள் கூறியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த தாலிபான்கள், பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இதனால் அங்கு பொருளாதார நெருக்கடி, பசி, பட்டினி போன்ற அவலங்கள் ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையில் தற்போது தாலிபான்கள், கடந்த 3 மாதங்களில் 600 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு நிலவரமும் மேம்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 30-ஆம் திகதி காபூல் சர்வதேச விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலை நடத்தி ஐஎஸ் தீவிரவாதிகள் தலிபான்களுக்கு சவால்விடுத்தனர்.


அதனைத் தொடர்ந்து மசூதிகளில் தாக்குதல், காபூல் மருத்துவமனையில் தாக்குதல் நடந்து வந்ததால், கடந்த மூன்று மாதங்களில் ஐஎஸ் கோராசன் தீவிரவாதிகள் 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக