திங்கள், 25 அக்டோபர், 2021

"Mother Lu" சீனாவின் முதல் பெண் புரட்சியாளர். கிபி 900 த்தில் அரசவம்சமாக இருந்த ஹான் பேரரசின் வம்சாவளி!

May be an image of 1 person and standing

புகச்சோவ் :  Mother Lu....! (தாய் லூ)  .. Red eyebrows...! (செம்புருவ போராளிகள்)
      மதர் லூ சீனாவின் முதல் பெண் புரட்சியாளர். கிபி 900 த்தில் அரசவம்சமாக இருந்த ஹான் பேரரசின் வம்சாவளி. கிபி 1400 களில் ஆட்சியை இழந்த லூவின் பரம்பரை, அதன்பிரகு மதிப்புமிக்க பிரபுக்களாக வாழ்ந்துவந்தனர்.
         கிபி 1700 களின் இறுதியில் ஜின் வம்சத்தினர் ஆண்ட, ஹோண்டாங் மற்றும் ஜியாங்சு பகுதிகளின் மஞ்சளாறு பாய்ந்து விவசாய நிலங்களை சின்னாபின்னமாக்கியது.
இதனொல் விவசாயம் அழிந்து உழைக்கும் மக்கள் தவித்தபோதும், கெங்ஷி பேரரசர் லியூசுவான் கண்டுகொள்ளாமலேயே இருந்தார். அதை பயன்படுத்திக்கொண்ட ஜின் மாநில அரசான வாங்மாங் வரிகளை வசூலிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து வக்கிர நடவடிக்கைகளை செய்துவந்தார். இதனால் விவசாயிகள் கொத்துகொத்தாக மடிந்துவீழ்ந்தனர். எஞ்சியிருந்தவர்கள் வாங்மாங்கை எதிர்க்கத்துணிந்தனர்.

       இக்காலத்தில்தான் மதர் லூவின் மகன் லூ யூ என்பவர் ஹைக்கோ ஜில்லாவில் சிறிய அதிகாரியாக வேலைசெய்துவந்தார். ஹைக்கோ ஜில்லாவின் ஆள்வோருக்கு எதிராக லூயூ தவறுசெய்ததாகக்கூறி, அவரை மரணதண்டனை விதித்தார், ஆள்வோருக்கு சாதகமான நீதிபதியொருவர். இதனால் மகனை இழந்த பெரும் புகழும் நிலவுடமையுங்கொண்ட தாயார் லூ! கடுங்கோபமடைந்தார். ஆளும் அதிகாரவர்க்கத்தின் திமிரை அடக்குவேன் என்று நாற்பதாம் வயதில் புரட்சியிலிறங்கினார்.
           முதலில் தன்னுடைய பெரும் நிலங்கள் உடமைகளை விற்று பணம் திரட்டினார். அதைக்கொண்டு ஏழை விவசாயிகளைக்கொண்ட படையணியொன்றை உருவாக்கினார். அவர்களுக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் குதிரைகளையும் வாங்கினார். அந்த படையணி ஆரம்பத்திலேயே 10000 வீரர்களைக்கொண்டதாக இருந்தது.
         மதர் லூ முதலில் ஹோண்டாங்கின் பகுதியான ஹைக்கோவை தாக்கி வெற்றிகொண்டார். அங்கே மகனுக்கு தண்டனை வழங்கிய நீதிபதியை வெட்டிக்கொன்றார். பிறகு ஏகபோக ஆட்டமாடிய அதிகாரிகளனைவரும் வெட்டி வீழ்த்தப்பட்டனர். மதர் லூவின் இந்த வெற்றியானது கெங்ஷி பகுதியின் ஆள்வோரை நடுநடுங்கவைத்தது. அதன்பிறகும் நிற்காமல் தொடர்ந்தது
 மதர் லூவின் புரட்சிப்போராட்டம்.
                 மதர் லூவின் இந்த வெற்றியானது, ஏற்கெனவே மஞ்சள்நதி சேதத்திற்காக வரிவிதிப்பை எதிர்த்து போராடிவந்த விவசாய போராளிகளை உற்சாகப்படுத்தி ஆயுதமேந்தவைத்தது. அதில் ஃபேங்ஸோங்கின் தலைமையில் போராடியவர்கள், போராடுவதற்கு போதுமானபணமோ, உணவோ,ஆயுதமோ இல்லாமல் போராடிக்கொண்டிருந்தனர். சரியாக 1800 களின் முதலாமாண்டில்,
மதர் லூ திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். இதனால் செய்வதறியாத
மதர் லூவின் படையினர், எஞ்சிய பணத்தோடும், ஆயுதங்களோடும், பலமற்றிருந்த ஃபேங்ஸோங்கின் போராளிகளோடு இணைந்தனர். இதனால் ஜிங் அரசின் வாங்மாங்குடைய கொடுமைக்கெதிராக வலுவான போராளிகள் படையொன்று உருவானது.
     கிபி 900 த்திலிருந்தே சிறிது பெண்வழி சமூகமாக ஹான் பேரரசு இருந்துள்ளது. ஹான் அரசகுலத்தின் பெண்கள் வீராங்கனைகளாக இருந்ததால், மக்கள் அவர்களை தேவதைகளாகவும், மந்திர தந்திரமுள்ள சூனியக்காரிகளாகவும் நம்பியுள்ளனர். ஹான் அரச பரம்பரையில் வந்த மதர் லூவையும், ஒரு சூனியக்காரியாகவே 20 பதாம் நூற்றாண்டு ஆரம்பகாலம் வரையில், சீன வரலாற்றில் குறிப்பிட்டுள்ளனர். கம்யூனிச அரசு அமைந்தபிறகே, போராளிகளின் வரலாறு சரியாக திருத்தப்பட்டுள்ளது.
                  ஜியாங்சு பகுதியில் முதன்முதலாக வாங்மாங்கின் அரசபடைகளை எதிர்த்து ஃபேங்ஸோங்கின் படைகள் நேரடிப்போரில் இறங்கினர். வாங்மாங் தந்திரமாக தனது படைப்பிரிவில்  மற்றொரு புரட்சிப்படையின் விவசாயிகள் படையினரையும் பணங்கொடுத்தும், பதவியாசை காட்டியும் சேர்த்திருந்தான். போரில் ஃபேங்ஸோங்கின் விவசாயிகள் படைகளுக்கு எதிராக, விவசாயிகளே களமிரங்கியதைக்கண்ட ஃபேங்ஸோங்கால் வேறெதுவும் செய்யமுடியவில்லை. சக. விவசாயிகளை கொல்வதைவிட பின்வாங்குவதே சரியென்று பின்வாங்கிவிட்டான்.
               கிமு 150 காலகட்டத்தில் இதே ஜிங் பகுதி ஹான் பேரரசுக்கு உட்பட்டதாக இருந்தது. அப்போதைய ஹான் பேரரசின் குதிரைப்படை வீரர்கள், தங்கள் புருவங்களை சிவப்புநிற மைபூசிக்கொள்ள ஆணையிட்டிருந்தார். ஒருவார தோல்விக்குப்பின்,  தேநீர் அருந்துகிற கோப்பையில் பழைய சிவப்பு புருவ (ரெட் ஐப்ரோஸ்) குதிரைவீரர்களின் சித்திரத்தைக்கண்ட ஃபேங்ஸோங், இந்த யுக்தியை தனது விவசாயிகள் படைக்கும் உபயோகிக்க சொன்னார். மறுநாள் ஃபேங்ஸோங்கின் விவசாயப்படையினர் அனைவரும் புருவத்தில் சிவப்புமையிட்டு போரிட்டனர். எதிரணியினர் இந்த சிவப்பு புருவ வீரர்களைப்பார்த்து மிரணடு பின்வாங்கியதால், ஜியாங்சு பகுதியில் பெருவாரியான வெற்றிகளை பெற்றது ஃபேங்ஸோங்கின் படைகள்.
            இறுதியாக 1821 ல் வாங்மேங் தோற்கடிக்கப்பட்டான். கெங்ஷி பேரரசர் தலையிட்டு சமரசம் செய்தார். இதனால்,
300 வருட ஜிங் அரசபரம்பரை நீக்கப்பட்டு, பழைய ஹான் வம்சத்தின் இளம்வயது வாரிசான 14 வயது சிறுவன் லீயூ பென்சி ஹோன்டாங் ஜியாங்சு பகுதிக்கு அரசனாக அறிவிக்கப்பட்டான். ஆனால், பத்து வருடங்கள்கூட அது நீடிக்கவில்லை.
   ஏனென்றால், போராட்டத்திற்கு காரணமான விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு எந்தவித விடிவும் கிட்டவில்லை.மேலும் அவர்கள் , தலைமையேற்ற  எல்லோராலும் வஞ்சிக்கப்படுபவர்களாகவே இருந்தார்கள் என்பதால், கிளர்ச்சிகளும், புரட்சிகளும் தொடர்ந்து ஆளும் வர்க்கங்களை வீழ்த்திக்கொண்டேயிருந்தன. நிலையான ஆதிக்க அரசுக்கான சூழல் கிபி 1700 க்குப்பிறகு  இறுதிவரையில் சீனாவில் ஏற்படவில்லை.
                                                               புகச்சோவ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக