திங்கள், 25 அக்டோபர், 2021

முஸ்லிம் காதலனை கொன்ற இந்து குடும்பம் !கூலிப்படையை ஏவியது அம்பலம்

 News18 Tamil : மதம் கடந்த காதல்.. காதலன் தலை துண்டித்து கொலை - பெண்ணின் குடும்பத்தினர் கூலிப்படையை ஏவியது அம்பலம்
இளைஞரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் இளைஞர் கடுமையாக சித்ரவதைக்கு உள்ளானது தெரியவந்தது.
மகளை காதலித்த இளைஞரை இந்து அமைப்பினரை ஏவி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியைச் சேர்ந்த  24 வயதான அர்பாஸ் அஃதாப் என்ற இளைஞர் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி மாயமானார். இளைஞர் காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் செப்டம்பர் 28-ம் தேதி கானாபுரா அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் அர்பாஸ் அஃதாப் உடல் கண்டெடுக்கப்பட்டது.  

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அர்பாஸ் அஃதாப்  ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் தனது மகனை கொலை செய்து விட்டதாகவும் அவரது தாயார் போலீஸில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அர்பாஸ் அஃதாப் காதலித்ததாக கூறப்பட்ட பெண்ணின் பெற்றோரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. தனது மகள் இஸ்லாமிய இளைஞரை காதலித்தை விரும்பாத அவரது பெற்றோர்கள் கூலிப்படையை ஏவி அந்த அர்பாஸை கொலை செய்துள்ளனர். இதற்காக கூலிப்படையினருக்கு சுமார் 5 லட்சம் கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அந்தப்பெண்ணின் தந்தை ஈரப்பா தாய் சுசீலா  உட்பட 10 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரிகள், “ அர்பாஸ்  சிவில் எஞ்சினியரிங் முடித்துவிட்டு கார் விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார். இவரும் அதேப்பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா என்ற பெண்ணும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் ஸ்வேதா குடும்பத்தினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ஆனால் ஸ்வேதாவோ தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார்.


இதனையடுத்து அந்தப்பகுதியில் உள்ள ராம்சேனாவை சேர்ந்த புண்டலிக மகராஜிடம் விஷயத்தை கூறியுள்ளனர். அவர் தனது அமைப்பைச் சேர்ந்த சிலரை அந்த இளைஞரின் வீட்டிற்கு அனுப்பு அவரது தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து அந்தப்பெண் தனது மகனை அழைத்துக்கொண்டு கானாப்பூரில் இருந்து பெலகாவிக்கு சென்றுள்ளார்.  ஸ்வேதா – அர்பாஸ் இருவரும் தங்களது காதலை தொடர்ந்து வந்துள்ளனர். இதனையடுத்து தனது மகளை தொந்தரவு செய்வதாக அர்பாஸ் மீது போலீசில் ஸ்வேதா குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர்.

இந்த புகாரை விசாரித்த போது அந்த இளைஞரையே அவர் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக கூறியுள்ளார். இதனை அவமானமாக கருதிய அவரது பெற்றோர் ராம்சேனா அமைப்பை சேர்ந்த நபரை மீண்டும் அணுகி இளைஞர் கொலை செய்ய பணம் கொடுத்துள்ளனர். செப்டம்பர் 27-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைத்துள்ளனர். இவர்களது பேச்சை நம்பி வந்த இளைஞரை ராம்சேனா அமைப்பு அடித்துக்கொன்றனர். அவரது தலையை தணியாக துண்டித்து உடல் தனியாக தண்டவாளத்தில் போட்டுவிட்டு சென்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் இளைஞர் கடுமையாக சித்ரவதைக்கு உள்ளானது தெரியவந்தது. அவரது கைகளை பின்னால் கட்டிவைத்து தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் ராம்சேனா அமைப்பை சேர்ந்தவர்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறின

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக