செவ்வாய், 12 அக்டோபர், 2021

”பலாலி – மீனம்பாகம் விமானசேவையு விரைவில்.. இந்திய துணை தூதர் அ .நடராஜன் பேட்டி

 Nadarajah Kuruparan  :  “வட கிழக்கு மாகாணங்களில், மூன்றாவது பங்காளர்களின் தேவையும் இல்லை, அதனை இந்தியா விரும்பவும் இல்லை”
”13ஆவது திருத்தம் குறித்து, இந்தியா மீண்டும் ஆழமாக வலியுறுத்தி உள்ளது.”
”இலங்கை எந்த நாடுகளுடனும் உறவைப் பேண முடியும். அது ஒரு சுதந்திர நாடு. அனால் இந்திய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்க முடியாது.”
”யாழ் கலாசார மையம் விரைவில் திறக்கப்படும் என நம்புகிறேன்.”
”பலாலி  – மீனம்பாகம் விமானசேவையும் விரைவில் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.”
”இலங்கையில் இந்தியா பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.”
”இலங்கையில் வாழும்  இந்திய வம்சாவழி மக்கள் குறித்தும் இந்தியா அதிக கரிசனை கொண்டுள்ளது.”


athavan Rradio athavan tv யில் UK நேரம் இரவு 7.00 மணிக்கு - இலங்கை நேரம் இரவு 11.30ற்கு இடம்பெற்ற, நேருக்கு நேர் நிகழ்ச்சியில் இந்தியாவின் ஓய்வுபெற்ற இராஜதந்திரியும், இலங்கைக்கான இந்தியாவின் கண்டி, மற்றும் யாழ்ப்பாண முன்னாள் துணைத் தூதுவருமான, A.நடராஜன் (A. Natarajan Former Consul-General of India in Jaffna & Former Assistant High Commissioner of India in Kandy) அவர்களுடனான நேர்காணல் இது.
தயாரிப்பு - அளிக்கை - நடராஜா குருபரன்.
உதவி - பிரியதர்சினி ராஜரத்தினம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக