வெள்ளி, 15 அக்டோபர், 2021

பிரிட்டிஷ் எம்.பி., கத்தியால் குத்தி கொலை.. பட்டப்பகலில் தேவாலயத்தில் கொடூரம்

 Velayuthan Murali  - Samayam Tamil  : பட்டப்பகலில், சர்ச்சில் எம்.பி.,யை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
பிரிட்டன் நாட்டில், தொகுதி மக்களை சந்திக்க வந்த நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் அமெஸ் என்பவரை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவி வகித்து வருகிறார். இவரது கட்சியைச் சேர்ந்தவர், டேவிட் அமெஸ். 69 வயதாகும் இவர், எசெக்ஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்.
டேவிட் அமெஸ், ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில், தொகுதி மக்களை சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்பது வழக்கம். இதன்படி, வெள்ளிக்கிழமையான இன்று, எசெக்ஸ் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு சர்ச்சில், பொது மக்களை சந்திப்பதற்காக வந்தார்.


அப்போது அங்கு வந்த 25 வயது இளைஞர் ஒருவர், டேவிட் அமெஸ் அருகே சென்று, மறைத்து வைத்திருந்த கத்தியால், அவரை சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே டேவிட் அமெஸ் உயிரிழந்தார். இதை அடுத்து அங்கு இருந்த போலீசார், எம்.பி.,யை கத்தியால் குத்திய இளைஞரை மடக்கி பிடித்து கைது செய்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக