திங்கள், 11 அக்டோபர், 2021

சாட்டை துரைமுருகன் கைது .. 25 ஆம் தேதிவரை நாங்குநேரி கிளைச் சிறையில் அடைப்பு .

May be an image of 1 person and standing

 மின்னம்பலம் : முதல்வர் மீது அவதூறு: நாம் தமிழர் பிரமுகர் கைது?
நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் யூடியூபருமான சாட்டை துரைமுருகன் நேற்று (அக்டோபர் 10) கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வருகின்றன.
கன்னியாகுமரியில் நேற்று அக்டோபர் 10ஆம் தேதி , குமரியில் இருந்து இயற்கை வளங்கள் கேரளத்துக்குக் கடத்தப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்தது.
இதில் பேசிய சாட்டை துரைமுருகன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறப்பு பற்றி இழிவுபடுத்தி பேசியிருக்கிறார். ஏற்கனவே மணல் கடத்தல் தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜியை விமர்சித்துப் பேசியதற்காக கரூர் மாவட்ட திமுக சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார் சாட்டை துரைமுருகன்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் தாக்கி இழிவுபடுத்திப் பேசியதற்காக துரைமுருகன் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் நேற்றே திமுகவினரால் புகார்கள் அளிக்கப்பட்டன.


இந்த புகார்களை அடிப்படையாக வைத்து சாட்டை துரைமுருகன் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டதாகவும் விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  -வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக