செவ்வாய், 5 அக்டோபர், 2021

வள்ளலார் பிறந்த நாள் அக்டோபர் 5, 1823 வள்ளலார் காணாமல் போன நாள் சனவரி 30, 1874 என்ன நடந்திருக்கும்?

May be an image of 2 people

செல்லபுரம் வள்ளியம்மை :  வள்ளலார் இராமலிங்க ஸ்வாமிகளின் பிறந்த நாள்  அக்டோபர் 5, 1823
காணாமல் போன நாள் சனவரி 30, 1874
உண்மையில் வள்ளலாருக்கு என்னதான் நடந்திருக்கும்?
இன்னும் பதில் கிடைக்காத சில கேள்விகள்..
வள்ளலாரின் மர்ம மறைவும் நாவலரின் சந்தேக மௌனமும்!
வடலூர் ராமலிங்க சுவாமிகள்  காணாமல் போய் அல்லது மர்மமாக இறந்து  ஐந்து வருடங்களுக்கு பின்பாகத்தான் ஆறுமுக நாவலர் காலமானார்.
வடலூர் ராமலிங்க வள்ளலாரை கடுமையாக எதிர்த்து அவர் மீது பொய் வழக்கு போட்டு தோற்றுப்போனவர் ஆறுமுக நாவலர்!
நாவலரின் பின்பலமாக நின்றவர்கள் வைதீகர்கள் .
இராமலிங்க வள்ளலார் மீது நிகழ்த்தப்பட்ட கொடிய தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி இதுவரை ஒருவரும் கேள்விகள் எழுப்பியதில்லை.


எந்த ஆத்மீகவாதிகளும் சரி எந்த வைதீக பெருமான்களும் சரி வள்ளலாரின் மறைவு பற்றி வாயே திறக்கவில்லை என்று தெரிகிறது .
எனவே இவர்கள் சந்தேகத்திற்கு உரியவர்கள்தான்.
தமிழ்நாடு முழுவதும் அறிந்த ஒரு மாபெரும் ஆத்மீகவாதியின் மர்ம மரணம் பற்றி ஒரு ஆத்மீக பெருந்தகைகளும் சந்தேக கேள்வி எழுப்பாமை அவர்களும் கூட்டு குற்றவாளிகள்தானோ  என்ற சந்தேகத்திற்கு இடம் அளிக்கிறது.
அதிலும் குறிப்பாக ஆறுமுக நாவலர் இந்த குற்றச்சாட்டில் இருந்து தப்ப முடியாது.
மிகப்பெரும் தர்க்கீக வாதங்களும் வழக்கும் இவர்கள் இருவரிடையே இருந்திருக்கிறது.
வள்ளலார் மீது அளவற்ற கோபத்தில் இருந்திருக்கிறார் ஆறுமுக நாவலர் . வள்ளலாரின் இறப்பு என்பது நாவலரின் கோட்பாட்டு ரீதியான ஒரு எதிரியின் மறைவாகவே இருந்திருக்கிறது
அப்படிப்பட்ட நிலையில் வள்ளலாரின் இறப்பு மர்மமான முறையில் நிகழ்ந்துள்ளது
இது பற்றி நாவலர்  சத்தம் போடாமல் மௌனமாகவே இருந்து விட்டார் என்னும் பொழுது சந்தேகம் வருமா வராதா?
வடலூர்  ராமலிங்க சுவாமிகள் மர்ம மரணம் சனவரி 30, 1874
ஆறுமுக நாவலர் இறப்பு : திசம்பர் 5, 1879
பிற்சேர்க்கை : (விக்கிபீடியா)
 ஆறுமுக நாவலரின் தமிழக பயணங்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு ஆறுமுக நாவலர் பாடநூல்கள் அச்சிடுவதற்கு அச்சியந்திரம் வாங்குவதற்காக நல்லூர் சதாசிவம்பிள்ளையுடன் 1849 ஆடி மாதம் சென்னை சென்றார். அங்கு திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப்பிரசங்கம் செய்து தமது புலமையை வெளிப்படுத்தி நாவலர் பட்டத்தைப் பெற்றார்.
சென்னையில் சிலகாலமிருந்து சூடாமணி நிகண்டுரையும் சௌந்தரியலங்கரி உரையும் அச்சிற் பதித்தபின் ஓர் அச்சியந்திரத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார்.
சென்னையில் திருவாசகம், திருக்கோவையார் நூல்களை 1859 வைகாசி மாதம் வெளியிட்டார். பெரியதொரு அச்சியந்திரத்தை விலைக்கு வாங்கி, சென்னை தங்கசாலைத் தெருவில் வித்தியானுபாலன இயந்திரசாலை என்ற அச்சகம் நிறுவிப் பல நூல்களையும் அச்சிட்டார். சென்னையிலும் திருவாவடுதுறை மற்றும் திருநாகைக்கோராணம் ஆகிய இடங்களில் தங்கி சைவப்பிரசங்கங்கள் செய்தபின் 1862 பங்குனியில் யாழ்ப்பாணம் திரும்பினார்.
1863 மார்கழியில் மீண்டும் தமிழகம் சென்றார். அங்கு இராமநாதபுர சமஸ்தானத்தில் பிரசங்கம் செய்தார். அங்கிருந்து மதுரை சென்று மீனாட்சியம்மை சந்நிதானத்திலே பிரசங்கித்து மீனாட்சிக்கு அணிவிக்கப்பெற்ற பரிவட்டமும் பூமாலையும் அணிவிக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார்.
குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமை ஆதீனத்தில் அவர் செய்த பிரசங்கத்தை மெச்சி நாவலரை பல்லக்கில் ஏற்றித் தம்பிரான்கள், ஓதுவார்கள் சூழ்ந்து வர சகல விருதுகள், மங்கல வாத்தியங்களுடன் பட்டணப் பிரவேசம் செய்வித்தார்கள். அங்கிருந்து திருப்பெருந்துறை, திருப்பள்ளிருக்குவேளூர், சீர்காழி ஆகிய தலங்களை வணங்கிச் சிதம்பரம் சேர்ந்தார்.
அங்கு 1864 ஐப்பசியில் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார்
1866 மார்கழி மாதம் சென்னை திரும்பி சைவப்பிரசங்கங்கள் செய்வதிலும் நூல்கள் அச்சிட்டு வெளியிடுவதிலும் நாவலர் ஈடுபட்டார்.
1869 ஆனியில் மீண்டும் சிதம்பரம் சென்றார். பின் தருமபுரி, திருவிடைமருதூர், திருவேட்டக்குடி, காரைக்கால், கோடிக்கரை ஆகிய தலங்களைத் தரிசித்த பின்னர்
1870 பங்குனியில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக