புதன், 27 அக்டோபர், 2021

சொத்துக்காக தாய், தந்தை, தம்பி கொலை - கணவன், மனைவிக்கு 4 தூக்கு ; 2 ஆயுள் தண்டனை! திண்டிவனம்

jl

நக்கீரன் செய்திப்பிரிவு  :  சொத்துக்காகப் பெற்றோரைக் கொலை செய்த மகன் மற்றும் மருமகளுக்கு நான்கு தூக்குத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திண்டிவனம் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியானார்கள், ஏசி வெடித்ததில் இந்த விபத்து நடைபெற்றதாக அந்த விபத்தில் உயிர் இழந்த நபரின் மகன் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை செய்ததில், சொத்துக்காக அப்பா,அம்மா, தம்பி உள்ளிட்ட மூவரை மனைவியுடன் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

 இது தொடர்பான வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தலா 4 மரண தண்டனை,  இரண்டு ஆயுள் தண்டனை மற்றும் மூன்று லட்சம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக