சனி, 11 செப்டம்பர், 2021

ஆட்சி கலைப்பு... திருமாவளவன் பேச்சால் திமுக உடன்பிறப்புகள் ஷாக்?

 Giridharan N | Samayam Tamil  : யாரை ஆளுநராக கொண்டு வந்தாலும் அவர்களுக்கு தமிழ்நாட்டின் ஆட்சியை கலைத்துவிடும் தெம்பும், திராணியும் கிடையாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கெத்தாக கூறியுள்ளார்.
 சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன்
ஹைலைட்ஸ்:
சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் மறைந்த இம்மானுவேல் சேகரின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. விசிக தலைவர் தொல்.திருமாவளவன், இமானுவேல் சேகரன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியது:
ஆதிதிராவிட பழங்குடி நலத்துறை ஆணையம் உருவாக்கியதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சிக்கல் உள்ளது என்பதால், தலித் சமூகம் அல்லாத ஒருவரை இப்பதவிக்கு நியமிக்க வேண்டும்.

தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளதில் காங்கிரஸ் கட்சியின் ஐயம் சரியானது. உளவுத் துறையோடு சுலபமான உறவு உள்ள ஒருவரை தமிழக ஆளுநராக வேண்டுமென்றே ஒன்றிய அரசு நியமித்துள்ளது.

ஜனநாயக பூர்வமாக செயல்படக்கூடிய ஒருவரை நியமிக்க வேண்டும். யாரை ஆளுநராக கொண்டு வந்தாலும் அவர்களுக்கு தமிழ்நாட்டின் ஆட்சியை கலைத்துவிடும் தெம்பும், திராணியும் கிடையாது.

பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய பாலியல் வன்முறையில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும். இதற்கென தனி சிறப்பு தீர்மானத்தை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் .மத்திய அரசு பெண்களை பாதுகாக்க ஏற்கெனவே கொண்டு வந்துள்ள 'நிர்பயா' சட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக