திங்கள், 6 செப்டம்பர், 2021

தனுஷ்கோடியில் இருந்து இலங்கை வர முயன்ற பெண் நடுக்கடலில் கைது

தமிழகத்தில் இருந்து தப்ப முயன்ற முல்லைத்தீவு யுவதிக்கு நேர்ந்த கதி! -  ஜே.வி.பி நியூஸ்

BBC : முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த சிவனேசன் கஸ்தூரி (வயது19) என்ற யுவதியே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவது, இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இலங்கையில் இருந்து தப்பி, தமிழகத்தை சென்றடைந்து, அங்கு உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்தார்.
அங்கு நபரொருவருடன் ஏற்பட்ட காதலால், 2018ஆம் ஆண்டு விமானம் மூலம், சென்னைக்கு வந்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
விசா முடிந்த பின்னர், இலங்கைக்கு திரும்பி செல்லாமல், சென்னை – வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில், அவர் சட்டவிரோதமாக தங்கி வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், முல்லைத்தீவு – முள்ளியவளை கிராமத்தில் வசித்து வரும் குறித்த பெண்ணின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால், இலங்கைக்கு திரும்பி செல்வதற்காக இன்று (6) அதிகாலை, தனுஷ்கோடியில் இருந்து நாட்டு படகு மூலம் சட்டவிரோதமாக முல்லைத்தீவுக்கு புறப்பட்டுள்ளார்.

அப்போது, தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டு பகுதியில் வைத்து, இந்திய கடலோர காவல்படையினரின் ரோந்து படகு வந்ததை அறிந்த படகோட்டி, குறித்த பெண்ணை, முதல் மணல் திட்டு பகுதியில், இறங்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், இராமேஸ்வரம் – மெரைன் பொலிஸார், படகில் சென்று குறித்த பெண்ணை கைது செய்து, தனுஷ்கோடி அழைத்து வந்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, இராமேஸ்வரம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில், அவரை ஒப்படைத்தனர்.

அத்துடன், அவரிடம் இருந்து கடவுச்சீட்டு, இலங்கை குடியுரிமை ஆவணங்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோதமாக நாட்டு படகில், அப்பெண்ணை அழைத்துச் சென்ற முகவரை தேடப்பட்டு வருகின்றார்.

விசாரணைகளின் பின்னர், அவரை இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக