திங்கள், 6 செப்டம்பர், 2021

ஆப்கானில் அதிர்ச்சி திருப்பம்.. சில முக்கிய தலைவர்கள் கொலை.. தாலிபான்களிடம் சமாதானம் பேசும் கொரில்லா படை!

Shyamsundar -   Oneindia Tamil:  காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் படைகளுக்கு எதிராக ஒரே எதிர்ப்பு குரலாக இருந்த பஞ்சசீர் மலை கொரில்லா படை போராளிகள் தற்போது தாலிபான்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் முடிவிற்கு வந்துள்ளனர்.
அங்கு தாலிபான்களுக்கு எதிராக நார்தன் அலயன்ஸ் குழுவை சேர்ந்த இவர்கள் கடுமையாக போராடி வந்த நிலையில் தற்போது பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதால் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை செய்ய முடிவு செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை 1996ல் இருந்தே எதிர்த்த போராளி குழுதான் நார்தன் அலயன்ஸ். அங்கு முஜாகிதீன் அமைப்பு ரஷ்ய படைகளுக்கு எதிராக எதிர்த்து போராடிய போது அதில் இந்த குழுவும் ஒன்றாக இருந்தது.
பின்னர் ரஷ்ய படைகள் வெளியேறிய பின் முஜாகிதீன் அமைப்பு பல பிரிவுகளாக உடைந்தது. இதில் ஒரு அமைப்பான தாலிபான்கள் அங்கு 1996ல் ஆட்சிக்கு வந்தது.
தாலிபான்களின் கடுமையான கட்டுப்பாடு, மோசமான ஆட்சியை தொடக்கத்தில் இருந்து எதிர்த்த இஸ்லாமிய பூர்வ குடி மக்கள்தான் நார்தன் அலயன்ஸ். இவர்கள் பஞ்சசீர் மலை பகுதியை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வந்த கொரில்லா படை போராளிகள் ஆவர். 1996 முதல் 2001 வரை முழுக்க முழுக்க தாலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்த போது வடக்கு ஆப்கான் பகுதி முழுக்க நார்தன் அலயன்ஸ் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

பஞ்சசீர் மலை பகுதியில் அஹமது ஷா மசூத் தலைமையில் இந்த படைகள் இயங்கி வந்தது. தாலிபான்கள் படைகளை அமெரிக்கா வீழ்த்துவதற்கு இந்த கொரில்லா படைகள் முக்கிய பங்கு வகித்தது. அமெரிக்க படைகளுடன் இணைந்து இந்த கொரில்லா படைகள்தான் தாலிபான்களை வீழ்த்த அடிப்படை திட்டம் வகுத்து கொடுத்தது. இந்த அமைப்பை சேர்ந்தவர்தான் அம்ருல்லா சாலே. இவர் போரின் போது அமெரிக்க படைகளுக்கு உதவியதற்கு கை மாறாக இவருக்கு சிஐஏ பயிற்சி அளித்தது. அதோடு இவர்தான் நாட்டின் துணை அதிபராக ஆப்கானிஸ்தானில் பதவி வகித்தார். தற்போது இவர் பஞ்சசீர் மலை பகுதியில்தான் தலைமறைவாகி உள்ளார்.

இந்த நிலையில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் வென்ற பின் பஞ்சசீர் மலை பகுதி கொரில்லா படை தாலிபான்களை எதிர்த்தது. இங்கு மட்டும் தாலிபான்கள் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. கடந்த மூன்று வாரமாக இங்கு கடுமையான மோதல் நிலவி வருகிறது. முக்கியமாக கடந்த இரண்டு வாரமாக நடக்கும் மோதலில் கடுமையான துப்பாக்கி சூடுகள் நடத்தப்பட்டது. பஞ்சசீர் மலை பகுதியில் 600க்கும் அதிகமான தாலிபான் படையினர் கொலை செய்யப்பட்டதாக இந்த கொரில்லா படை குறிப்பிட்டு இருந்தது. அதோடு தாலிபான்களுக்கு எதிராக மற்ற பகுதிகளிலும் கிளர்ச்சியை ஏற்படுத்துவோம் என்று இந்த புரட்சி படை தெரிவித்து இருந்தது. ஆனால் என்ன ஆனால் என்ன ஆனால் ஆப்கானிஸ்தானில் தாலிபான் படைகளுக்கு எதிராக ஒரே எதிர்ப்பு குரலாக இருந்த பஞ்சசீர் மலை கொரில்லா படை போராளிகள் தற்போது தாலிபான்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் முடிவிற்கு வந்துள்ளனர்.

பஞ்சசீர் மலை பகுதியில் தாலிபான்கள் வேகமாக முன்னேறியதால் அங்கு கொரில்லா படையினர் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 1996ல் இருந்த தாலிபான்களுக்கும் இப்போது இருக்கும் தாலிபான்களுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. இப்போது தாலிபான்களிடம் நவீன ஆயுதங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் உள்ளன. ஆனால் போராளி குழுக்களிடம் அவ்வளவு ஆயுதங்கள் இல்லை. இதனால் போராளி குழுக்கள் அங்கு பெரிய பின்னடைவை சந்தித்தது. கடும் மோதல் கடும் மோதல் இதில் பஞ்சசீர் மலை தாலிபான்கள் தொடர்ச்சியாக ஹெலிகாப்டர் மூலம் குண்டு மழை பொழிந்ததாக கூறப்படுகிறது. வரிசையாக குண்டுகளை வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் கொரில்லா படை குழுவின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். போராளி குழுவின் செய்தி தொடர்பாளர் பாஹிம் தாஷ்டி மற்ற முக்கிய தலைவர்களான குல் ஹைதர் கான், மமுனீப் அமிரி, வதூத், அஹமது ஷா மசூத்தின் உறவினர் உட்பட பலர் பலியாகிவிட்டனர். கொரில்லா படையை இயக்கம் முக்கிய தளபதிகள் பலர் தாலிபான் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டனர். பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை இதை தொடர்ந்தே தற்போது கொரில்லா படையினர் தாலிபான்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் முடிவில் இறங்கி உள்ளனர். தங்கள் பகுதியை சுதந்திரமாக விட்டுவிட வேண்டும். இங்கே தாலிபான்கள் அத்துமீற கூடாது. கூடுதல் அதிகாரத்துடன் எங்கள் பகுதியில் சிறப்பு ஆட்சி அதிகாரத்தை எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று போராளி குழுக்கள் கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிகிறது.

ஆனால் தாலிபான்கள் தொடர்ந்து ஆயுதங்களுடன் பஞ்சசீர் மலை பகுதியில் முன்னேறி வருகிறது. தாலிபான்கள் பேச்சுவார்த்தைக்கு இடம் கொடுக்காமல் வடக்கு பகுதியையும் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் இன்னொரு முக்கிய மோதலும் ஏற்பட்டுள்ளது. துணை அதிபர் அஹமது சாலே இருந்த இடத்தில் ஹெலிகாப்டர் மூலம் தாலிபான்கள் குண்டு போட்டு இருக்கிறது. இதில் அவர் இருந்த வீடு தரைமட்டமானது. ஆனால் அப்போது சாலே அந்த வீட்டில் இல்லை. இதனால் அவர் நூலிழையில் உயிர் தப்பினார். அதோடு அஹமது ஷா மசூத்தின் மகன் அஹமது மசூத்தும் தலைமறைவாகிவிட்டார். பஞ்சசீர் மலை பகுதி கிட்டத்தட்ட வீழ்ந்துவிட்டது, இனி மீண்டும் போராளி குழுக்கள் வெற்றிபெற வாய்ப்பு இல்லை என்றே தகவல்கள் வருகின்றன.

அங்கு தாலிபான்கள் இப்போதே வெற்றியை கொண்டாட ஆரம்பித்துவிட்டது. அதிகபட்சம் இன்னும் 2 நாட்களில் பஞ்சசீர் மலை பகுதியை தாலிபான்கள் முழுதாக கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக