செவ்வாய், 14 செப்டம்பர், 2021

மேல்சபை எம்.பி. தேர்தல்- தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு (டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார்)

மேல்சபை எம்.பி. தேர்தல்- தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

மாலைமலர் : மேல்சபை தேர்தலில் வேறு கட்சிகள் போட்டியிட வாய்ப்பு இல்லை என்பதால் தி.மு.க. வேட்பாளர்கள் இருவரும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
மேல்சபை எம்.பி. தேர்தல்- தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
பாராளுமன்ற மேல்சபையில் இரண்டு எம்.பி. இடங்கள் காலியாக உள்ளன.  
அந்த இடங்களுக்கு வருகிற 4-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
மனுதாக்கல் செய்ய 22-ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி இருக்கும் பட்சத்தில் அக்டோபர் 4-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழக சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் அந்த 2 மேல்சபை எம்.பி. இடங்களையும் தி.மு.க. எளிதாக பெறும் என்பது ஏற்கனவே உறுதியானது.

இந்த நிலையில் அந்த 2 இடங்களுக்கும் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வருகிற அக்டோபர் 4-ந்தேதியன்று நடைபெற இருக்கும் மாநிலங்களவை 2 உறுப்பினர்கள் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்களாக டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேல்சபை தேர்தலில் வேறு கட்சிகள் போட்டியிட வாய்ப்பு இல்லை என்பதால் தி.மு.க. வேட்பாளர்கள் இருவரும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக