செவ்வாய், 7 செப்டம்பர், 2021

இலங்கையில் 17 பேரடங்கிய ISIS குழுவினர் பெண்களுக்கு விடுத்திருக்கும் அச்சுறுத்தல்.. சமூக ஊடக லீக்ஸ்

No photo description available.

Rishvin Ismath  :  யார் இவர், இப்படியான அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது என்று கேட்டுவிட்டு, இது ஒரு வெறும் தனி மனிதனின் பைத்தியகாரத் தனம் என்று சொல்லி "இதற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை" என்று நழுவிவிட முடியாது.
ஒரு பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு ஊறு விளைவித்த பலூன் பிரச்சினை, சேலையை உலக மகா ஆபாச ஆடையாக பிரகடனப் படுத்திய ஆர்ப்பாட்டம் என்ற வரிசையில் தற்பொழுது இந்தப் 17 பெயரர் அடங்கிதாக தெரிவிக்கப்படும் இலங்கையின் ISIS குழுவினர் சுமுக வாழ்வு மீது விடுத்துள்ள பகிரங்க அச்சுறுத்தல் மற்றும் அதற்குக் கிடைத்துள்ள ஆதரவு என்று விடயம் கைமீறி சென்றுகொண்டு இருக்கின்றது.
தமிழர்களுக்கு மத்தியில் தோன்றிய விடுதலை ஆயுதக் குழுக்களை ஓரளவிற்கு வளரவிட்டமை, புலிகள் இந்திய இராணுவத்தால் அடக்கப்பட்டு இருந்த சமயம், இந்திய இராணுவத்தை வெளியேற்றி, புலிகளுக்கு ஆயுதமும் கொடுத்ததன மூலம் தமிழர்களுக்கு மத்தியில் ஆயுதக் குழு இருப்பதை உறுதிசெய்தமை என்று திட்டமிட்டு செயற்பட்ட சிங்கள பேரினவாதம், எப்படி தமிழ் ஆயுதக் குழுக்களையும், புலிகளையும் சாட்டாக வைத்து தமிழர்களை கல்வி மற்றும் அரச துறைகளில் பின்னுக்கு தள்ளியதோ, அதே போன்று, முஸ்லிம்களை பொருளாதார, கல்வி ரீதியில் ஒட்டுமொத்தமாக பின்னுக்கு தள்ள விரும்புவதால், முஸ்லிம்களுக்கு மத்தியில் தெளிவான இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்கள் உருவாகுவதை ஆவலோடு எதிர்பார்த்து இருப்பதால், மேலே குறிப்பிட்டது போன்ற ஆரம்பநிலை இஸ்லாமிய பயங்கரவாதிகள் குறித்து அரசு கவனம் செலுத்தப் போவதில்லை என்பதை ஊகிக்கலாம்.

ஏனெனில் ISIS இற்கு பகிரங்கமாக ஆதரவு வழங்கும் "தேசிய தெளஹீத் ஜமாத்" மற்றும் பல தனி நபர்கள் என்று யார் மீதும் அரசு எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே போதுமான உதாரணம் ஆகும்.
.
இஸ்லாமிய பயங்கரவாதம் வளருவதற்கான வாய்ப்புகள் இலங்கையில் இப்படியாக திறந்துவிடப்பட்டு இருக்க, முஸ்லிம் அல்லாதவர்களை தாஜா பண்ணுவதற்காக "இஸ்லாத்திற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை", "இஸ்லாம் சமாதானத்தின் மதம்", "முஹம்மது நபி அமைதியின் தூதர்", "இஸ்லாத்தின் விடுதலை அரசியல்", "குரானிய தத்துவங்கள்" என்றெல்லாம் வார்த்தை ஜாலம் பண்ணி தொடர்ந்தும் சளைக்காமல், சலிக்காமல் பச்சைப் பொய்களை சொல்லிக்கொண்டு இருக்காமல், "முஹம்மது நபியின் மதீனா வாழ்க்கை ஒரு பயங்கரவாதியின் வாழ்க்கையாகத்தான் இருந்தது" என்கின்ற உண்மையை ஏற்றுக் கொண்டு, அதனை முற்றாக முஸ்லிம்களின் மனங்களில் இருந்து நீக்காத வரை, இஸ்லாமிய பயங்கரவாதத்தை உண்மையில் ஒழிக்க முடியாது, மாறாக தற்காலிகமாக மறைத்து வைக்கலாம், மற்றவர்களுக்கு தென்படாமல்.
.
(*முஹம்மது நபியின் மதீனா வாழ்க்கை பற்றிய  கருத்து குரான், ஹதீஸ்கள் ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்தது. கோவேறு கழுதை போன்ற ஒரு மிருகத்தில் ஏறி விண்வெளிக்கு போனதாக கதை விட்டமை போன்ற விடயங்கள் இருந்தாலும், மக்காவில் முஹம்மது நபியின் வாழ்க்கை பொதுவாகவே அமைதியான ஒன்றாக, அகிம்சை நிறைந்த ஒன்றாகவே காணப்பட்டது. அவர் யாரையும் அடித்ததாகக் கூட எவ்வித தகவல்களும் இல்லை. மதீனாவிற்கு சென்று அதிகாரம் கிடைத்த பின்னர் அவர் தலைகீழாக மாறிப் போனார். )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக