செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி

 மாலைமலர் : சென்னை:   பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவர் பாரதி பாஸ்கர். சாலமன் பாப்பையா நடத்தும் பட்டிமன்றங்களில் இவரைக் காணலாம்.
இந்நிலையில், நேற்று காலை அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதௌ இதையடுத்து அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாரதி பாஸ்கருக்கு மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக