செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

குடிசை மாற்று வாரிய வீடுகள்... புதிய திட்டங்களைக் கையில் எடுக்கும் தி.மு.க. அரசு

குடிசை மாற்று வாரிய வீடுகள்... புதிய திட்டங்களைக் கையில் எடுக்கும் தி.மு.க. அரசு : அது என்ன?

கலைஞர் செய்திகள்   : சென்னையில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுதந்திரா நகர், கிரீம்ஸ் சாலை, நக்கீரர் நகர், எஸ்.புரம், எம்.கே. ராதா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்,"குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகள் முத்தமிழறிஞர் கலைஞரால் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்டவை. நீண்டகால பயன்பாடு, தட்பவெப்ப நிலை மாறுபாடு ஆகியவற்றால் அவை சிதிலமடைந்துள்ளன.
அவற்றை இடித்துவிட்டு புதிதாகக் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம்.
குடிசை மாற்று வாரிய வீடுகள்... புதிய திட்டங்களைக் கையில் எடுக்கும் தி.மு.க. அரசு : அது என்ன?


சென்னையில் எந்தெந்த பகுதிகளிலெல்லாம் குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ளனவோ அங்கெல்லாம் ஆய்வு செய்து, சிதிலமடைந்த வீடுகளை இடித்து அப்புறப்படுத்தி அதற்குப் பதிலாக புதிய குடியிருப்புகளை அதே இடத்தில் கட்டித்தர முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் ஆய்வு செய்துள்ளோம். விரையில் பணிகளைத் தொடங்கி, உரியக் காலத்திற்குள் முடித்து பயனாளிகளிடம் வீடுகள் ஒப்படைக்கப்படும்.

குடிசை மாற்று வீடுகள் 220 சதுரஅடி கொண்டதாக உள்ள நிலையில், அவற்றை 420 சதுரஅடி பரப்பளவுடன் கூடிய வீடுகளாகக் கட்டித்தர முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி குடியிருப்புகள் அனைத்தும் தரமானதாக சிறந்த பொறியாளர்களை கொண்டு கட்டித்தரப்படும். சுமார் 22 ஆயிரம் வீடுகள் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவையாக உள்ளன. தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்கத் தரைதள தொட்டிகள், குடியிருப்புகளில் வீடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அமைக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக