புதன், 11 ஆகஸ்ட், 2021

பார்ப்பன பெண்ணை திருமணம் செய்த ஆர் எஸ் எஸ் தலித் தொண்டர் கொலை .. உத்தர பிரதேசம்

May be an image of 2 people and people sitting

Chinniah Kasi  : RSS ஊழியர், யோகியின் அன்புக்கு பாத்திரமானவர், யோகியின் சொந்தத் தொகுதியைச் சார்ந்தவர் கொல்லப்பட்டார்.
இவரைக் கொன்றவர்கள் முஸ்லிம்களோ, கிறிஸ்தவர்களோ அல்ல..
சங்கப் பரிவார சித்தாந்தவாதிகளே..
இவர் செய்த குற்றம், தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர்  பார்ப்பன  பெண்ணைக் காதல் திருமணம் செய்தது தான்..
அனீஸ் கன்னோஜ்ஜியா என்ற தலித் இளைஞர், தீப்தி மிஸ்ரா என்ற பிராமணப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
சங்கப் பரிவாரச் சித்தாந்தத்தை நம்பும் சகோதரர்களே சிந்தியுங்கள்..
இருவரும் ஹிந்துக்கள் தானே.
பின் என்ன பிரச்சினை..?
சங்கப் பரிவார சித்தாந்தம் என்பது அனைத்து ஹிந்துக்களுக்குமானது அல்ல..
ஒரு ஆர்.எஸ்.எஸ் ஊழியர் கொல்லப் பட்ட பின்பும்... இதுவரை எந்த ஒரு குற்றவாளியையும் ஆளும் சங்கப் பரிவார பா.ஜ.க யோகி அரசு இதுவரை கைது செய்யவில்லை.


நடைபெற்ற குற்றத்தைக் கண்டித்துக் குற்றவாளிகளைக் கைது செய்யச் சொல்லி எந்த ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க சங்கப் பரிவார உறுப்பினர்களும் போராடவில்லை.
கொல்லப்பட்ட தலித் பிரிவைச் சார்ந்த தலித்துகளின் தலைவரான சந்திரசேகர் ஆசாத் அவர்கள்தான் மக்களை ஒன்று திரட்டி நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாகச் சிறுபான்மைச் சமூகத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
Chinniah Kasi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக