ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

டெல்லியில் பாலியல் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை.. கணவர் போலீஸ் புகார்!

 Vishnupriya R  -   Oneindia Tamil News : டெல்லி: டெல்லியில் குருகிராமில் ஒரு ஹோட்டல் அறையில் பாலியல் தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி குருகிராம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷாஹித். இவரது மனைவி பாலியல் தொழிலாளி.
இவர் கணவரின் நண்பரான ரிங்குவுடன் வெளியே சென்றிருந்தாராம். ரிங்கு ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வருகிறார்.  இந்த நிலையில் முகமதுவின் மனைவி குருகிராமில் உள்ள அதுல் கட்டாரியா சவுக் அருகே உள்ள ஹோட்டல் அறையில் கொல்லப்பட்டதாக ரிங்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து முகமது சம்பவ இடத்திற்கு சென்றார். அங்கு தனது மனைவி ரத்த வெள்ளத்தில் மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஹோட்டல் நிர்வாகத்திடம் விசாரித்தார்.   sex-worker-stabbed-to-death


அப்போது அவரது மனைவியை ரிங்கு தான் இந்த ஹோட்டலில் விட்டுவிட்டு சென்றதாக தெரிவித்தனர். அவரது மனைவி சச்சின் என்பவரை சந்தித்ததாகவும் இருவரும் சேர்ந்து அறையை புக் செய்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது அவர்களுக்கு இடையே நடந்த தகராறில் முகமதுவின் மனைவியை கொலை செய்துவிட்டு சச்சின் தப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முகமதுவின் புகாரில் பேரில் சச்சினை போலீஸார் தேடி வருகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக