திங்கள், 12 ஜூலை, 2021

எப்படி எங்களுக்கு அவ்வளவு Refund வருகிறது? நல்ல Refund வாங்கித்தருவது குற்றமா?

May be an image of 1 person
May be a cartoon of 1 person and text that says 'S TAX RETURN 5'

Karthikeyan Fastura :  Intaxsevaவில் சில வாடிக்கையாளர்களின் ஒரு கேள்வி ரெம்ப Wierd ஆக இருக்கும். " எப்படி சார் எங்களுக்கு அவ்வளவு Refund வருகிறது ?
இதில் ஏதும் தப்பு இல்லையே..? "
(நல்ல Refund வாங்கித்தருவது குத்தமாயா..?
அரசே இதை Tax RETURNS fling என்று தான் சொல்கிறது)
எங்களோட பதில் :  அது நீங்கள் வரியாக கட்டிய உங்களுடைய பணம்.
இதுவரை முறையாக தாக்கல் செய்திருக்க மாட்டீர்கள். income tax தளம் கொடுத்திருக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திருக்க மாட்டீர்கள். உங்கள் நிறுவனங்கள் 80C தவிர சில செக்சன்களை முயற்சித்திருக்கவே மாட்டார்கள். ஏனென்றால் அவை ஒவ்வொருசமயமும் மாறிக்கொண்டே இருப்பவை. ஆனால் அவற்றிற்கெல்லாம் எந்த தரவுகளும் வைக்க வேண்டிய அவசியமும் இருக்காது. உதாரணத்திற்கு  உங்கள் பெற்றோருக்கு ஆகும் மருத்துவ செலவீனங்களை 55000 வரை கணக்கில் காட்டலாம். இதற்கான தரவுகள் எதையும் அவர்கள் கேட்பதில்லை. இப்படி நிறைய வழிகள் இருக்கின்றன.


இவற்றை பற்றி தொடர்ந்து கவனித்து வருவதால், அதனை முயற்சித்து பார்த்து புரிந்துகொண்டதால் தான் எங்களால் முடிகிறது.
சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நீங்கள் உங்கள் வருவாயில் சராசரியாக 12% சதவீதக்கும் அதிகமாக நேரடி வரியாக செலுத்துகிறீர்கள். அம்பானி போன்ற பெரும் செல்வந்தர்கள் 3% கூட கட்டுவதில்லை. அதையும் அரசு அனுமதிக்கிறது. எப்படி? அதற்கு தான் ஆடிட்டிங் படையே வைத்திருக்கிறார்கள். எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் புள்ளி வைத்து கோலம் போட்டுவிடுவார்கள். உதாரணத்திற்கு Special Economic Zoneல் இடம்பெறும் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு உண்டு. அது யாருக்காக என்றால் புது நிறுவனங்கள் தங்கள் தொழிலை வளர்த்தெடுக்க. ஒரு வளர்ந்த நிறுவனமான ரிலையன்ஸ் தொடக்கநிறுவனம் போல அங்கு ஒரு இடத்தை பெற்று மொத்த உற்பத்தியும் அங்குதான் நடைபெறுவது போல கணக்கு காட்டி வரிவிலக்கு பெற்றிருக்கிறார்கள். இது சரியா என்றால் ஆடிட்டிங் கணக்குப்படி சரி என்கிறது அரசு.  
நாம் மட்டும் ஏன் அப்பாவித்தனமாக இருக்கவேண்டும்? வருமானவரி இணையதளம் கொடுத்திருக்கும் வாய்ப்புகளில் நமக்கு பொருந்தும் அனைத்தையும் பயன்படுத்திக்கொள்வதில் என்ன பிரச்சனை? அதைத்தான் Intaxseva செய்துகொடுக்கிறது.
வருமான வரியை தாக்கல் செய்யுங்கள்.  உங்கள் வரியை மிச்சப்படுத்தி அதையே முதலீட்டாக மாற்றுங்கள். இந்த கூகிள் பாரத்தில் உங்கள் விவரங்களை அளித்தால் எங்கள் குழுவினர் உங்களை தொடர்புகொண்டு உதவுவார்கள்
https://forms.gle/6SPrHshwp75jcR7g9

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக