ஞாயிறு, 25 ஜூலை, 2021

கார் விபத்தில் நடிகை யாஷிகா படுகாயம்.. மற்றொரு பெண் பலி

சென்டர் மீடியனில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் நடிகை யாஷிகா படுகாயம்.. மற்றொரு பெண் பலி: போஸார் விசாரணை!

கலைஞர் செய்திகள்  : மாமல்லபுரம் அருகே கார் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த விபத்தில் பிக்பாஸ் நடிகை படுகாயம் அடைந்துள்ள நிலையில், மற்றொரு பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில், நள்ளிரவு 1-மணியளவில் அதிவேகமாக வந்த கார் சாலையின் சென்டர் மீடியனில் மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைக் கண்ட சக வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு பூஞ்சேரியில் உள்ள விபத்து சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
காரில் பயணித்த பிக்பாஸ் தொலைக்காட்சி தொடரில் நடித்த நடிகை யாஷிகா, மற்றும் அவரது இரு ஆண் நண்பர்கள் படுகாயத்துடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் யாஷிகாவின் தோழியான ஹைதராபாத் பகுதியை சேர்ந்த வள்ளிச்செட்டி பவணி-28. என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் யாஷிகா ஆனந்தின் நண்பர் என்பதும் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உடலை கைப்பற்றிய மாமல்லபுரம் போலிஸார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்பட்டதா? என

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக