சனி, 3 ஜூலை, 2021

முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்ட ஹூண்டாய் கார் நினைவு சின்னமாக ஹூண்டாய் மியூசியத்தில் வைக்கப்படும் ஹூண்டாய் நிறுவனம் அறிவிப்பு

May be an image of car, outdoors and text that says 'ஆஹா இதல்லவா பெருமைக்கு நாட்டு தலைவர்க்கே கிடைக்காத பெருமை நம்ப முதல்வருக்கு கிடைத்துள்ளது... ALCAZAR முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்ட Hyundai கார் விற்பனைக்கு அல்ல என்றும் நிறுவனத்தில் அது ஒரு நினைவுச்சின்னமாக பாதுகாக்கப்படும் என்றும் ஹீண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது..'

Veerakumar - Oneindia Tamil : சென்னை அருகே ஹூண்டாய் நிறுவனத்துக்கு சமீபத்தில் விசிட் செய்தார் முதல்வர் முக ஸ்டாலின்.இந்தியாவில் தனது ஒரு கோடியாவது வாகனத்தை உற்பத்தி செய்து சாதித்துள்ளது
ஹூண்டாய் நிறுவனத்தின் அல்கசார் என்ற எஸ்யூவி வகை வாகனம் தற்போது சந்தைக்கு வருகிறது அல்லவா, அதுதான் ஒரு கோடியாவது வாகனம்.
எனவே அதன் மீது ஸ்டாலின் தனது கையெழுத்தை போட்டார். காரின் போனட் பகுதியில், வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு முக ஸ்டாலின் என்று தனது கையெழுத்திட்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி என்பதையும் எழுதி இருந்தார் ஸ்டாலின்.
முன்னதாக தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஹூண்டாய் நிறுவனம் 5 கோடி ரூபாய் நிதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது மேட்டருக்கு வருவோம்.
முதல்வர் ஸ்டாலின் கையெழுத்து போட்ட வாகனம் விற்பனைக்கு வரும்போது
அதை எப்படியாவது தாங்கள் வாங்கி விட வேண்டும், நினைவு பரிசாக மாற்றிவிட வேண்டும் என்று பல்வேறு தொழில் அதிபர்கள் வழி மீது விழி வைத்து காத்திருந்தார்கள்.



தொழிலதிபர்கள் இருக்கட்டும்.. அமைச்சர்களில் சிலர் கூட தங்கள் தலைவர் கையெழுத்துப் போட்ட வாகனங்களை வாங்குவது பெருமை என்று நினைத்து அதற்கான முயற்சிகளை ஆரம்பித்தனர்.

இதில்தான் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. தொழிலதிபர்கள் அல்லது அமைச்சர்கள் என்று யார் நினைத்தாலும் அந்த காரை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிவிப்பு தான் இதற்கு காரணம்.

ஒரு கோடியாவது கார் என்பதோடு முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்ட கார் என்பதால் நினைவு பெட்டகமாக அந்த காரை தங்கள் நிறுவனமே வைத்துக்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது, இது விற்பனைக்கு அல்ல என்பதுதான் இதன் அர்த்தம். எனவே அந்த காரை வாங்க வேண்டும் என்று ஆவலோடு காத்திருந்த அத்தனை பேரும் ஏமாந்து போய் விட்டனர்.

தமிழ்நாட்டின்  முக்கியத்துவம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பரந்து விரிந்துள்ள ஹூண்டாய் நிறுவனத்தில் சுமார் 25,000 தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் பங்கேற்ற ஸ்டாலின் தெற்காசியாவில் அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழகத்தை மாற்ற இருப்பதாக சூளுரைத்தார் என்பது நினைவிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக