சனி, 3 ஜூலை, 2021

இதயம் அறக்கட்டளை காப்பக குழந்தைகளை விற்ற வழக்கில் மேலும் 2 பேர் கைது

news 18  

மதுரை: இதயம் அறக்கட்டளை காப்பகம் மூலம் குழந்தைகளை விற்ற வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த சிவக்குமார், மாதர்ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதயம் அறக்கட்டளை காப்பகம் மூலம் குழந்தைகள் விற்கப்பட்ட வழக்கில் இருவரும் தேடப்பட்டு வந்தனர். காப்பக நிர்வாகிகள், குழந்தைகளை விற்றவர்கள், வாங்கியவர்கள், இடைத்தரகர்கள் என ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதயம் அறக்கட்டளை உரிமையாளர் சிவக்குமார் மற்றும் மாதர்ஷா ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக