வெள்ளி, 2 ஜூலை, 2021

ஒன்றிய அரசு அம்பானிகளுக்கு வரி தள்ளுபடி கொடுத்து வாழ வைத்திருக்கிறார்கள்

May be an image of text that says 'RECORD HIGH!'

Karthikeyan Fastura  :இன்று மதுரையில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை தாண்டிவிட்டது.
குருடாயில் 130 டாலரை தொடும்போது மன்மோகன் சிங் ஆட்சியில் வரியைக் குறைத்துக் கொண்டே வந்தார். காரணம் அவர் ஒரு பொருளாதார அறிஞர். பொருளாதார சமநிலை பற்றி புரிந்தவர்.
Debt instrumentsகளில் முதலீடு செய்து வந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை வேகமாக திரும்ப எடுத்து வருகிறார்கள்.
கடன் பத்திரங்கள் என்பவை நீண்டகால பொருளாதார கணக்கில் கருதப்பட்டு உறுதியான வருமானத்தை கொடுப்பவை.
ரிஸ்க்கு மிக மிக குறைவானது. Debt instruments குறைவதற்கு முக்கிய காரணம் பணம் மதிப்பு குறைவது அதற்கு காரணமாக விலைவாசி உயர்வு இருப்பது அதற்கு காரணமாக பெட்ரோல் விலையில் சமரசம் இல்லாமல் ஏற்றிக் கொண்டே செல்வது.


பெட்ரோல் டீசல் விலையில் உலகிலேயே மிக அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. அதிக வரி விதிக்கும் பிறநாடுகளில் கூட தனிமனிதர்கள் எரிபொருளுக்காக செலவிடப்படும் தொகை இந்தியர்களுடன் ஒப்பிடும்போது குறைவு. உதாரணத்திற்கு நார்வேயில் நம்மை விட பெட்ரோல் விலை அதிகம்.

ஆனால் அவர்களின் தனி நபர் வருவாய் உடன் ஒப்பிடும்போது எரிபொருளுக்கு செலவிடப்படும் தொகை ஒரு சதவீதத்திற்கும் குறைவு. இங்க 5 சதவீதத்திலிருந்து இப்போது 10 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
பெட்ரோல் விலை ஒரு ரூபாய் ஏறும்போது, சாமானிய பொருட்களின் விலை ஒரு சராசரி மனிதனுக்கு 150 ரூபாய்க்கு வேட்டு வைக்கிறது. சம்பாதிக்கும் பணம் அனைத்தும் விலைவாசி உயர்வை சமாளிப்பதற்கு செல்லும்போது மிச்ச படுத்துவதற்கு எதுவுமில்லாமல் போகும்.
மகிழ்ச்சியும் மற்றும் கொண்டாட்டம் சார்ந்த தொழில்கள் உதாரணத்திற்கு சுற்றுலாத்துறை சினிமாதுறை ஹோட்டல்துறை முதல் அடியை வாங்கும்.
இரண்டாவது அடி வாகனத் துறை ரியல் எஸ்டேட் துறை எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை ஆகியவை அடி வாங்கும்.
மூன்றாவது அடி அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகமான பொருட்களின் விற்பனையில் நடக்கும்.
கடைசி அடி பிற துறைகள் அனைத்திலும் நடக்கும்.
ஒட்டுமொத்த பொருளாதாரமும் இன்னும் மோசமாகும். அதனால் தான் அன்றைய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த திமுக அரசும் வரியை குறைத்தன.
தொற்று நோய் ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் தேவைப்படும். 598 பில்லியன் டாலர்கள் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். இது பங்குச்சந்தை கணக்கு அல்ல இந்திய பொருளாதாரத்தின் கணக்கு.

இதிலிருந்து மீள்வதற்கு ஒன்றிய அரசு stimulus fund என்று 20 லட்சம் கோடி ஒதுக்கினார்கள். போலி கணக்கு தான். ஆனால் அவர்கள் அதை நடைமுறைப்படுத்திய முறை மோசமான முறை, Top to Bottom இருந்தது. அதாவது பெரிய நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி, கடன்களுக்கான வட்டி தள்ளுபடி, வீட்டுக் கடன்களுக்கான moratorium என்று இருந்தது. நடுத்தர மற்றும் சிறு குறு தொழில்களுக்கான பலன்கள் இதில் இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

ஆனால் உண்மையில் stimulus fund என்பது bottom to top என்று இருந்திருக்க வேண்டும். அடித்தட்டில் உள்ள மக்களுக்கு அதிக அளவில் பணத்தை கொண்டு சேர்த்து இருக்க வேண்டும். அவர்களது விலைவாசி உயர்வில் கையைக் கடிக்காமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அதற்குத் தேவையான நிதியை ஒதுக்கி வைத்து இருக்க வேண்டும். உதாரணத்திற்கு சமீபத்தில் ஆட்சிக்கு வந்த திமுக அரசு அடித்தட்டு மக்களுக்கு நிதியை இந்த கொடும் தொற்று காலத்தில் கொண்டு போய் சேர்த்தார்கள். அவர்களுக்கு தேவையான மளிகைப் பொருட்களை ரேஷன் கடை வழியாக குறைவான விலையில் கொடுத்தார்கள். பெண்களுக்கான பேருந்து கட்டண செலவை குறைத்தார்கள். பொருளாதாரம் புரிதல் கொண்ட நல்ல அரசு செய்ய வேண்டியது இதுவே.

இதையே ஒன்றிய அரசு செய்திருந்தால் மிக விரைவாக பலமடங்காக பொருளாதாரம் மீண்டு வர வாய்ப்பு இருந்திருக்கும். மாறாக ஒன்றிய அரசு அம்பானிகளுக்கு வரி தள்ளுபடி கொடுத்து வாழ வைத்திருக்கிறார்கள். 20,000 கோடி கட்ட வேண்டிய இடத்தில் 1,700 கோடி கட்டினால் போதும் என்று விட்டிருக்கிறார்கள்.
அம்பானிகளுக்கும் கூட அறிவு இருந்தால் இப்படியான ஏமாற்று வேலைகளில் ஈடுபட மாட்டார்கள். ஏனென்றால் நாளை அவர்களையும் சேர்த்துத்தான் பாதிக்கப்பட போகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக