நக்கீரன் செய்திப்பிரிவு : "தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் மத்திய அரசின் 'Fit India Movement' சான்று கட்டாயம்.
www.fitindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து வகை பள்ளிகளும் சான்றிதழ் பெற வேண்டும்.
மிகக் குறைந்தப் பள்ளிகளே பதிவு செய்துள்ள நிலையில் இது ஏற்புடையதல்ல.
பள்ளிகள் ஜூலை 20- ஆம் தேதிக்குள் பதிவு செய்து 'Fit India Movement' சான்று பெற்றாக வேண்டும்.
பள்ளிகள் சான்று பெறுவதைக் கண்காணித்து அறிக்கைத் தர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக