சனி, 3 ஜூலை, 2021

மதிமாறன் - ஜீவா சகாப்தனின் பேட்டி உள்நோக்கம் கொண்டதா?

Bilal Aliyar  : அன்பின் ஜீவ சகாப்தம் அவர்களுக்கு,  வணக்கம்
லிபர்ட்டி யூட்யூப் ஊடகம் மூலம் தமிழ்நாட்டில் நடக்கும் சமகால அரசியல், சமூக பிரச்சனைகளை குறித்து விவாதிக்கும், விமர்சிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறீர்கள். உங்களுடைய ஊடக முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள்.
கடந்த சில வாரங்களாக ஈழ அரசியலை மையப்படுத்தி அதில் திராவிடம் 2.0, அரக்கர்களின் கருத்துகளை, ஈழ அரசியலை தமிழ்நாட்டரசியலுக்குள் புகுத்தி குளிர்காய்பவர்களை விமர்சனத்துக்குள்ளாக்குவதையும் குறித்து   அண்ணன்  மதிமாறன்  அவர்களிடம் விவாதம் நடத்திய நிகழ்ச்சி பார்த்தேன்.
உங்களுடைய ஒரே நோக்கத்தை அடிப்படையாக கொண்ட பல கேள்விகளுக்கு நேரடியாகவும்,
தர்க்க ரீதியாகாவும் வரலாற்றின் பக்கம் நின்று அண்ணன் மதிமாறன் பதிலுரைத்தார்.
ஆனால் அந்த பேட்டி முழுவதும் இன்றைய ஈழ அரசியலின் மீதான விமர்சனங்களை திமுகவின் கருத்தாக கட்டமைக்க நீங்கள் முயன்றது தெளிவாக இருந்தது.


ஓர் ஊடகவியலாளராக உங்களுக்கு இருக்கும் உரிமையை நான் கேள்வி எழுப்ப இயலாது..
ஆன போதிலும் அந்த நிகழ்வின் ஒட்டுமொத்த சாரம்சம் ஈழ அரசியலுக்குள் திமுகவை இழுப்பதாகவும், அதன் பொருட்டு திமுகவிற்கு ஒரு அரசியல் ரீதியான பிரச்சனையை உருவாக்க முனைந்ததாகவும் இருந்தது என்பதையும்,
அதை மதிமாறன் தெளிவாக உணர்ந்து பொறுப்புடன் பதிலளித்தை உணர முடிந்தது.

ஈழ அரசியலை விமர்சிப்பவர்களை நோக்கி கேள்வி எழுப்பிய நீங்கள், அதேபோல் தற்போது பெரியார், திராவிட இயக்கம், திராவிட இயக்க முற்போக்கு தலைவர்களை அசிங்கமாக விமர்சித்திருக்கும் மேதகு திரைப்பட இயக்குனர் கிட்டு அவர்களையோ, 

இல்லை அத்திரைப்டத்தை வியந்தோதும் தமிழ்நாட்டு பெரியாரிய உணர்வாளர்களையோ, தபெவிகவை சார்ந்த அண்ணன் கொளத்தூர் மணியையோ, 

அந்த அமைப்பை சார்ந்தவர்களையோ அழைத்து கிட்டு அவர்களின் பெரியார் மீதான, திராவிடத்தின் வன்மம் மீதான பார்வையை ஈழ விடுதலையின் பார்வையாக முன்வைத்து கேள்வி எழுப்புவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
பிகு: கிட்டு அவர்களின் பெரியாரிய, திராவுட கருத்தியல் வன்மத்துற்கான ஆதாரங்களை விரும்பினால் அளிக்க தயாராக இருக்கிறேன்.
நன்றி
பிலால் அலியார்
30/06/2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக