ஞாயிறு, 11 ஜூலை, 2021

கொங்குநாடு - சங்கிகளின் சதி

May be an image of map and text

Raja Rajendran : "கொங்குநாடு - சங்கிகளின் சதி" -1
[இந்த அரசியலை உடைக்க விரும்புவோர் மட்டும் தயவுசெய்து முழுமையாக நிறைவுவார்த்தை வரை படிக்கவும்]
2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் தூசிதட்டி எடுத்துப் பார்த்தால் "கொங்கு நாடு" சங்கிகளின் சதி நிர்மூலம் ஆகும்.
அனைவரும் பொதுபுத்தியில் நம்புவது போல கொங்குநாடு என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினர் அதிகமில்லை என்பது அம்பலமாகும்.
"கொங்கு நாடு" என்றும் அந்தப் பகுதியில் திமுக முழுக்க வாஷ் அவுட் என்றும் முதல்வருக்கு தரப்படுகிற செய்தியினை அவர் அவ்வாறே நம்பக்கூடாது.
(அனைவரும் கவனிக்க.)
கடந்த நான்கு ஆண்டுகள் அடிமைகள் ஆட்சியில் அந்த அரசு
சாக்கடை காண்ட்ராக்ட் முதல் எல்லாவிதமான காண்ட்ராக்களிலும் ஈடுபடுத்திய 'ஜாதி' அஜெண்ட்டாதான் சங்கிகளின் "கொங்கு நாடு" அரசியலின் மூலம்.
எனவே அடிமை வகையறாக்கள் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் அனைத்துவித காண்ட்ராக்களையும் கொடுத்து கணக்கு வழக்கில்லாது அளவில்லாத ஊழல் பணத்தில் குளிக்கும்படி செய்தனர்.
இந்த நான்கு ஆண்டுகளில் குவிந்துள்ள தவறான காண்ட்ராக்களால் பணமலைக் குவியல்கள் அவர்களிடம் உள்ளது.


எனவே அவர்களுடன் சங்கிகள் இணைந்து இந்த சதிக்கு தூபமிடுகிறார்கள். துணைக்கு மற்றொரு  சாதிவெறி கும்பல் தலைவரை பணத்தால் வீழ்த்திவிட்டதும் இவர்களுக்கு சாதகமாகிவிட்டது.
இவர்களை வீழ்த்த "கொங்குநாடு" என சங்கிகள் முழங்கும் பகுதிகளில் என்னென்ன சாதிகள் பெரும்பான்மை என தமிழக முதல்வர் அவர்கள் 2011ல் எடுக்கப்பட்டு வெளியிடப்படாமல் வைத்திருக்கும் சாதிவாரி கணக்கெடுப்புகளை ஒருமுறை பார்வையிட்டு
இதை பகிரங்கப்படுத்தியோ அல்லது கமுக்கமாக எதிர் அரசியல் செய்யும் சிற்சில விஷயங்களை செய்தோ இவர்களை அடக்கிவிடலாம் அல்லது ஒன்றுமில்லாது ஆக்கிவிடலாம்.
இதை நன்கு தெரிந்துகொண்டதால்தான் எடப்பாடி தமது உட்கட்சி பூசலில் கேபியையும், சிவியையும் தேவர் சமூகத்திற்கு எதிராக சற்று ஓவராகவே பேசவைத்து அவர்கள் பின்னாடி அவரது முக்கிய கொங்கு சகாக்களுடன் பதுங்கிக் கொள்கிறார்.
(சுருக்கமாக ஒன்றுதான்...
கொங்குப்பகுதியில் எந்த சாதியினர் அதிகம்.
பொதுப்புத்தியிலும் சினிமா பார்த்தும் ஒரு குறிப்பிட்ட சாதியினர்தான் அங்கு அதிகமென அறிவுசார் ஆளுமைகளே நம்புவதற்காகத்தான் இந்த பதிவு.
கொங்கு மண்டலம் என்பது 44 தொகுதிகள் அடங்கிய பகுதி.
இதை மட்டும் எடுத்துப்பார்த்தாலே அனைத்தும் புரிந்துவிடும்.)
சங்கிகளை ஆரம்பத்திலேயே கிள்ளிவிட வேண்டும்.
இல்லாவிடில் சாதியினை வைத்து அவர்கள் தமிழகத்தை மற்றுமொரு உத்தரப்பிரதேசமாக மாற்றி விடுவார்கள்.  ஜாக்கிரதை.
நான்காண்டுகள் அடிமைகள் அரசு அடித்த கொள்ளைப் பணம், மலையளவு எடப்பாடியின் வகையறாக்களிடம் மட்டுமே மிதமிஞ்சி இருப்பதால் அங்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் சங்கிகள் சற்று அதிகமாக இயங்கும் பகுதிகளில் இவ்வாறு சதிச்செயல்கள் புரிய அவர்கள் உதவுகிறார்கள்.
இதை ஆரம்பத்திலேயே கண்டு,
தமிழகத்தை பிரிக்குமளவுக்கு கொங்குமண்டலத்தில் யார் இயங்குகிறார்கள், அவர்களது பொருளாதார பின்னணி என்ன, அது எங்கிருந்து வந்தது என அறிந்தும்...
கொங்குமண்டலத்தில் எந்த சாதியினர் அதிகம் என தமிழ்நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தியோ அல்லது அரசு மட்டுமாவது கமுக்கமாக அறிந்துகொண்டாலோ போதும்.
இந்த "கொங்குநாடு" சங்கி சதிகளைவெட்டி வீழ்த்திவிடலாம்.
பதிவினை பார்வையிடுவோர் கவனத்திற்கு ...
கீழே இருக்கும் படம்தான் கொங்குமண்டலம். இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை தொகுதிகள், அதில் எந்த சாதியினர் அதிகம் என தாங்களே ஒரு கணக்கு போட்டு
எடப்பாடியை ஆட்டிவைக்கும் டில்லி சதிகார கும்பல் பரப்பிவிடுவதுபோல
சினிமாவால் மற்றும் பொதுப்புத்தியில் உறைந்துள்ள ஒரு குறிப்பிட்ட சாதியினர்தான் அதிகமா என எளிதாக அலசி ஆராயுங்கள்...
உண்மை புரியும்...
[வரைபடத்தில் வண்ணமிட்டு காட்டப்பட்டிருக்கும் பகுதிகள் மட்டுமே கொங்குமண்டலம்- (வெள்ளையாக வண்ணமிடாமல் உள்ளதிருச்சி, விழுப்புரம் இதில் சேராது).]


2  -  கொங்கு மண்டலம் என வர்ணிக்கப்படும் பத்து மாவட்டங்களாவன ;
1.) கோவை
2.) ஈரோடு
3.) திருப்பூர்
4.) சேலம்
5.) நீலகிரி
6.) நாமக்கல்
7.) தருமபுரி
8.) கிருஷ்ணகிரி
9.) திண்டுக்கல்
10.) கரூர்
இதில் அடங்கியுள்ள மொத்தச் சட்டமன்றத் தொகுதிகள் 68.
அதில், அதிமுக கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகள் = 44 (65%)
திமுக கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகள் = 24 (35%)
இது 2021 நிலவரம்.
ஆனால், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இங்கு திமுக கூட்டணி 100% வெற்றியைப் பெற்றிருந்தது !
அதுதான் சங்கிகளுக்கு கடும் அதிர்ச்சியைத் தந்திருக்க வேண்டும் !
இம்முறை, சாதி, மதம், பணம் மூன்றும் பெருமளவில் விளையாண்டு 15 - 20% வாக்குகளை அதிகமாக ஈர்த்து விட்டார்கள் !
அதன் பின் விளைவுகள்தான் கொங்கு நாடு பிரிவினை என்கிற அசிங்கங்கள் எல்லாம் !
அதிலொரு சங்கி சொல்கிறான்.  இந்த பத்து மாவட்டங்களிலிருந்தும் தமிழர்களை வெளியேற்றி விட வேண்டுமாம் !
கோவை, சேலம், தருமபுரி மாவட்டங்கள்தான் 99% வெற்றியை அதிமுகவுக்கு அளித்திருக்கின்றன.  ஈரோடும், திருப்பூரும் உடந்தை !
மாறாக கரூர், நாமக்கல் திமுக வசம்.  அதற்கு செந்தில் பாலாஜி, கொங்கு ஈஸ்வரன் போன்றோர் உதவியிருக்கிறார்கள் !
திண்டுக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி நடு நிலை.
துல்லியமாகப் பார்த்தால் 5/10 மாவட்டங்கள் அதிமுக & சங்கிகளை அவ்வளவு விரும்பவில்லை !
இதர ஐந்து மாவட்டங்களான கோவை, சேலம், தருமபுரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில்தான் திமுக புறக்கணிப்பு பெரிதும் நிகழ்ந்துள்ளது !
திமுகவைப் பற்றிய பொய் பரப்புரைகள் இங்கு முழுமையாக எடுபட்டுள்ளன என்பது கொடுஞ்சோகம் !
ஆனால், இன்றையச் சூழ்நிலை நிச்சயம் அப்படி இருக்காது.  முதல்வரின் பல நடவடிக்கைகள் அங்கு பெரும் மாறுதலைக் கொண்டு வந்திருக்கும்.  2019 ற்கான சூழ்நிலையே மீண்டும் கனிந்திருக்கும் !
மூடர்களின் வெற்றி, குரங்குகளின் கரங்களில் சிக்கிய பூமாலையாகும் கதையாய், கொங்கு மண்டலத்தை தமிழ் நாட்டிலிருந்து பிரித்து, ஒட்டுமொத்தச் சங்கி மண்டலமாக்கி விடலாம் எனக் கனவு காணுகிறார்கள் இந்துத்துவ வெறியர்கள் !
திமுக ஏன் இன்னமும் இவர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என பலர் ஆதங்கம் கொள்கிறார்கள்.
அதெல்லாம் தானாய் நடக்கும்.
ஆனால், இந்த ஐந்து மாவட்டங்களை பெருவாரியாக அள்ள உதவியக் கட்சிகளான அதிமுக, பாமக போன்றக் கட்சிகள் என்ன எதிர்வினை ஆற்றப் போகின்றன ?
இந்த மண்டலம் கைவிட்டுப் போனால் எஞ்சிய தமிழ்நாட்டில் இருவருக்கும் என்ன வேலை இருக்கப் போகிறது ?
கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை சாதிக் கட்சித் தலைவர்களாக மருவிவிட்ட ராமதாசும், பழனிச்சாமியும் இனியேனும் உணர்வார்களா ?
மார்வாடி, குஜராத்தி முதலாளிகளையும், வடக்கத்திய தொழிலாளர்களையுமாய் நிரப்பி, கொங்கு மண்டலத்தை வடக்கு மாநிலங்களைப் போல, மதவெறி மண்டலமாய்க்  கட்டமைக்கப் போகிறோம் எனச் சூளுரைத்துச் செயல்படும் கையாலாகா வேதாளங்களை, கொங்கு தமிழர்கள் சுமக்கத் தயாராகிவிட்டார்களா ?
உங்களை டுமீலர்கள் என விளித்து டுமீல் நாட்டுக்கு துரத்தியடிப்போம் என்பவர்களுக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறீர்கள் ?
All is Well.  நடப்பவை யாவும் நல்லதற்கே.  
முகமூடிகள் கிழிபட்டு, கயவர்களின் உண்மை முகம் கொடூரமாகத்
 தென்பட்டிருக்கிறது அல்லவா ?
இனியேனும், சாதிக்காகவோ / மதத்துக்காகவோ தடம் மாறிப்போன,  அந்த 15 - 20% மக்கள் பண்படுங்கள்.  எஞ்சிய 40 - 45% மக்களைப் பற்றி கவலை இல்லை.  அவர்களை காலம் மாற்றும் !!!
Raja Rajendran Tamilnadu - பதிவிலிருந்து..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக