புதன், 14 ஜூலை, 2021

நடிகர் வடிவேலு :கொரோனாவை உலகமே பாராட்டும் வகையில் கட்டுப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்! 5 லட்சம் நிவாரண நிதி.....

tamil.filmibeat.com - Kalaimathi : சென்னை: நடிகர் வடிவேலு முதல்வர் கொரோனா நிதிக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு சினிமா பிரபலங்கள் பலரும் நன்கொடை அளித்து வருகின்றனர்.
உச்ச நட்சத்திரங்கள் முதல் கடைக்கோடி கலைஞர்கள் வரை பலரும் தங்களால் இயன்ற நிதியை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் வடிவேலு முதல்வர் ஸ்டாலினை இன்று தலைமை செயலகத்தில் சந்தித்து 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, முதல்வர் ஸ்டாலினுக்கு புகழராம் சூட்டினார்.

முன்னாள் முதல்வர் கலைஞருக்கு பெயர் வாங்கி தரும் அளவுக்கு ஸ்டாலின் ஆட்சி நடத்துவார் என்றார். உலகமே உற்று நோக்கும் நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தியுள்ளார் முக ஸ்டாலின் என்றும் பாராட்டினார் வடிவேலு.

மேலும் தமிழ்நாட்டை பிரிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த வடிவேலு நல்லா இருக்குற தமிழ்நாட்டை பிரிக்காதீர்கள். நாடு நாடு என பிரித்தால் என்னாவது. நான் அரசியல் பேசவில்லை. இதையெல்லாம் கேட்கும் போது தலைசுத்துது என்றார்.

தனது படத்தின் காமெடி காட்சியை சுட்டிக்காட்டி அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்று நடிகர் வடிவேலு வேண்டுகோள் விடுத்தார். மீண்டும் நடிப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த வடிவேலு, நல்லதே நடக்கும் என கூறியுள்ளார்.

24ஆம் புலிகேசி படத்தில் ஒப்பந்தப்படி நடிக்க மறுத்ததால் நடிகர் வடிவேலு படங்களில் நடிக்க தடை வாங்கினார் அப்படத்தின் தயாரிப்பாளரான ஷங்கர். இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார் வடிவேலு.
விரைவில் ரீ என்ட்ரியாகும் வடிவேலு.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

தான் 10 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருப்பது வேதனை என்றும் பொது நிகழ்ச்சிகளில் கண்ணீர் விட்டார். இந்நிலையில் மீண்டும் 24 ஆம் புலிகேசி படத்தில் வடிவேலு நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது. தற்போது நல்லதே நடக்கும் என வடிவேலு கூறியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக