மாலைமலர் : பிளஸ்2 மாணவர்கள் 22ம் தேதி மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 50 சதவீதம், பிளஸ்-1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 செய்முறைத்தேர்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தெரிவித்தது.
இந்த அடிப்படையில், மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில்,
வரும் 19ம் தேதி காலை 11 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 22ம் தேதி மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக