சனி, 3 ஜூலை, 2021

மயிலாப்பூர் க்ளப்... கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் பார் நடத்திவந்த அவாள் கும்பல் .. 10 ஆண்டாக செயல்பட்டு வந்த மதுபான பாருக்கு சீல்

 dhinakaran :அமைச்சர் உத்தரவை தொடர்ந்து அதிரடி நடவடிக்கை
ரூ.3 கோடி வாடகை பாக்கியை முழுவதும் தரக்கோரி நோட்டீஸ்
சென்னை: கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வரும் மயிலாப்பூர் கிளப்பில், கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த மதுபான பாருக்கு கோயில் நிர்வாகம் அதிரடியாக சீல் வைத்தது. மேலும்ரூ.3 கோடி வாடகை பாக்கியை செலுத்த வேண்டும் என்று கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 42 கிரவுண்ட் இடம், மயிலாப்பூர் லஸ் கார்னரில் ‘தி  மயிலாப்பூர் கிளப்’ நடத்த 1903 ஜனவரி 1ம் தேதி அளிக்கப்பட்டது.  இந்நிலையில் இதன் குத்தகை காலம் கடந்த 2000ம் ஆண்டு முடிவடைந்தது. அதன்பிறகு, குத்தகைக்கு விட தடை விதிக்கப்பட்டது. எனவே, மயிலாப்பூர் கிளப் நிர்வாகத்திடம் கோயில் நிர்வாகம் சந்தை நிலவரம் அடிப்படையில் நிர்ணயித்து வாடகை வசூலித்து வந்தது.

இந்த நிலையில், 2007ல் இந்த 42 கிரவுண்ட் நிலத்தில் 18 கிரவுண்ட் நிலத்தை கோயில் நிர்வாகம் கையகப்படுத்தி, அதை பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அங்கு பார்க்கிங் மற்றும் நூலக கட்டப்பட்டது.  இதனால் மீதம் இருந்த 24 கிரவுண்ட் நிலத்துக்கு கடந்த 2007 முதல் மாத வாடகைரூ.2.50 லட்சம் என நிர்ணயித்து ‘தி மயிலாப்பூர் கிளப்’ அறக்கட்டளை நிர்வாகத்துக்கு விடப்பட்டது. ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும்ரூ.50 ஆயிரம் கட்டணம் உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 2016ல் சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டதால் மாதம்ரூ.4.50 லட்சம் செலுத்த வேண்டும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதன்பேரில் தான்ரூ.3.57 கோடி பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த பாக்கி தொகையை செலுத்த கோரி கோயில் நிர்வாகம் பலமுறை கிளப் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்பேரில்  சில லட்சங்களை மட்டும் கிளப் நிர்வாகம் செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும்ரூ.3 கோடி பாக்கி தொகை தர வேண்டியிருப்பதாக தெரிகிறது.  இந்நிலையில் கோயிலின் புனித தன்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், மயிலாப்பூர் கிளப் நிர்வாகத்துக்கு பார் நடத்த சென்னை மாவட்ட கலெக்டரிடம் லைசென்ஸ் வாங்கி நடத்தி வந்ததாக தெரிகிறது. பார் நடத்த அனுமதி அளித்தது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் கிளப் நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருந்தது.

ஆனாலும், அரசியல் அழுத்தம் காரணமாக கலெக்டர் அலுவலகம் தொடர்ந்து கிளப் நிர்வாகம் பார் நடத்த லைசென்ஸ் அளித்ததாக தெரிகிறது. இதனால், கோயில் நிர்வாகத்தால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.  இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் அமைச்சர் சேகர்பாபுவிடம் கோயில் நிர்வாகம் சார்பில் இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு, மயிலாப்பூர் கிளப்பில் இருந்து மதுபான பாரை எடுக்கவில்லை என்றால் கோயில் நிர்வாகம் சார்பில் சீல் வைக்குமாறு உத்தரவிட்டார்.  இதை தொடர்ந்து, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில், மயிலாப்பூர் கிளப் நிர்வாக தலைவர் பிரமிட் நடராஜனுக்கு கடந்த 9ம் தேதி  நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, பிரமிட் நடராஜன் அந்த கிளப்பின் உறுப்பினர்களுக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

அதில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள தி மயிலாப்பூர் கிளப்பில் பார் செயல்படுவது அறநிலையத்துறை விதிகள், ஒழுங்குமுறை சட்டத்துக்கு எதிரானது. அதை மூடவில்லை என்றால், கிளப்பை ஆக்கிரமிப்பாளராக கருதி அகற்றப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  எனவே, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாரை மூடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 120 ஆண்டுகள் பழமையான இந்த கிளப் பாதுகாக்கப்பட வேண்டும். சோஷியல் கிளப்பில் பார் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று தான். இதற்கான மாற்று ஏற்பாடுகளை கிளப் நிர்வாகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே கோயில் நிர்வாகம் சார்பில் கிளப்பில் செயல்பட்டு வந்த பார் அதிரடியாக சீல் வைத்துள்ளது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாருக்கான லைசென்ஸ் ஓராண்டு உள்ள நிலையில் இதுகுறித்து மயிலாப்பூர் கோயில் நிர்வாகம் சார்பில் கலெக்டர் அலுவலகத்துக்கு உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதியிருப்பாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, மயிலாப்பூர் கிளப் நிர்வாகத்திடம் வாடகை பாக்கியானரூ.3 கோடியை முழுவதுமாக செலுத்த கோரி கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அளித்து இருப்பதாகவும் தெரிகிறது. இந்த பாக்கி தொகையை செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விவிஐபிக்கள் பெயரில் ஆட்டம்
மயிலாப்பூர் லஸ் கார்னரில் ‘தி மயிலாப்பூர் கிளப்’ கடந்த 1903 ஜனவரி 1ம் தேதி தொடங்கப்பட்டது. கபாலீஸ்வரர்  கோயிலுக்கு சொந்தமான 42 கிரவுண்ட் நிலத்தில் இந்த கிளப் உள்ளது. இங்கு அரசியல், சினிமாவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள்  உறுப்பினர்களாக உள்ளனர். உடற்பயிற்சி கூடத்துடன் உள்ள இந்த கிளப் மூலம்  ஆரம்பத்தில் கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுக்கு பயிற்சி தரப்பட்டது.  மேலும், இசை கச்சேரி மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு இந்த கிளப் வாடகைக்கும்  விடப்படுகிறது. அதன் பிறகு சீட்டு, மதுபானம் என்ற பெயரில் சென்னையின் விவிஐபிக்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி கோயில் இடத்தின் புனித தன்மைக்கு கேடு விளைவித்தனர். ஆரம்பத்தில் இந்த கிளப் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. கடந்த 2000ம் ஆண்டு அந்த குத்தகை காலம் முடிவடைந்தது.

விதியை மீறி  பாருக்கு லைசென்ஸ்
சமூக செயல்பாடுகளில் ஈடுபட்ட கிளப்  நிர்வாகம், ஒரு கட்டத்தில் சீட்டாட்டம் நடத்த ஆரம்பித்தது. பார் போன்ற  வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது. கோயில் இடத்தில் மதுபானம் நடத்துவதற்கும், குடிப்பதற்கும் அனுமதிக்கக் கூடாது என்று கோயில் நிர்வாகம் சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், இந்த மைலாப்பூர் கிளப்பில்  விஐபிக்கள் உறுப்பினர்களாக இருந்ததால், கடந்த 10 ஆண்டுகளாக கிளப்  நிர்வாகம் சார்பில் மதுபான பார் நடத்தப்பட்டது. இதற்கு கலெக்டர் விதிமீறி அனுமதி அளித்திருந்தார்.

கோயில் நிலத்தை முழுமையாக கைப்பற்ற வேண்டும்
புனிதமான கபாலீஸ்வரர் கோயிலுக்குச்  சொந்தமான இடத்தில் பார் நடத்தவும், மதுபானம் அருந்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, கோயிலின் புனிதத்தை கெடுத்துள்ளது. இதனால் உடனடியாக அந்த கிளப்பை அறநிலையத்துறை கைப்பற்ற வேண்டும் என்றும். பல நூறு கோடி  மதிப்புள்ள இடத்தில் கோயிலுக்கு வருமானம் வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 Diwa என் பார்ப்பன நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார்...  நீங்க (திமுக)எங்க வேணும்ன்னாலும் ஜெயிக்கலாம் ..
ஆனால் மயிலாப்பூர் தொகுதில ஜெயிக்க முடியாது என... அது எங்க கோட்டை ...
எங்க கம்யூணிட்டி ஆட்கள் அதிகம்.. அதனால் எங்க ஓட்டு திமுகவுக்கு விழாது என்பார்..
அது சமீப காலம்வரை உண்மையாகவும் இருந்து வந்தது...
அதிமுகவே வென்று வந்தது...
ஆனால் இம்முறை திமுக அத்தொகுதியையும் அடிச்சு தூக்கிடுச்சு....
அரசியல் ஆர்வமில்லாத...  மயிலாப்பூர் ..மந்தைவெளி ... போன்ற
Highly எலைட் சொசைட்டி ஆட்கள் அதிகமாக வசிக்கும் பகுதியான மயிலாப்பூர் உண்மையிலேயே ஒரு ரசனையான பகுதிதான்..
அதிலும்...
மயிலை கபாலீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதீகளிலும் (பின்புறமுள்ள குளத்தை தவிர மற்ற ) மூன்று வீதீகளும்.செம்ம ரகளையான நவரச கலவையான கடைகளை உடைய வீதீகள்...
ஜன்னல் பஜ்ஜி கடை..
ஒன்லி லியோ மிஷின் காஃபி...
பொட்டலம் கட்டி தரும் பட்டாணி கடை...
என சிறு கடைகள் முதல்...
பிரம்மாண்ட ஜுவல்லரிகள்...  ஹோட்டல்கள் என எப்போதுமே சாமான்ய மக்களின் கூட்டம் களை கட்டி இருக்கும் ...
இதற்கெல்லாம் கிஞ்சித்தும் சம்மந்தம் இல்லாமல்...
மயிலை எனப்படும் மயிலாப்பூரின் இன்னொரு பகுதியில்....
மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ்.. மயிலாப்பூர் க்ளப்..
மயிலாப்பூர் ரெக்ரியேசன் க்ளப்..
என ஒரு பக்கா உயர்தர பொழுது போக்கு உலகமும் இயங்கி வருகிறது...
இந்த உலகம் ஒரு தனி உலகம்..
அதில் சாமன்யர்களுக்கு இடமில்லை.. அதன் கட்டுப்பாடும் சாமன்யர்கள் கையில் இல்லை...
அந்த க்ளப் முழுக்க முழுக்க .. கெட்டுப்போன பால் பாக்கெட்காரர் ...
மதுவாந்தி...
YGP...
பிரமிட்... நடராஜன் ...
போன்ற பெரிய பெரிய பெரியவாக்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது....
ஆனால் இதில் ஒரே பொது அம்சம் என்னவென்றால்..
இதில் குறிப்பிட்டுள்ள சொத்துகள் அனைத்தும் மயிலை கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது... வெள்ளைக்காரன் காலத்தில் நூறு வருட காலத்திற்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது...
2000மாவது வருடத்தோடு அந்த குத்தகை காலம் முடிந்தது ..
அதன் பின்னும் பல காரணங்களை சொல்லி பெரிய அளவில் வாடகை ஏற்றாமல் சில நூறு ரூபாய்களே வாடகை கொடுத்து வந்திருக்கிறார்கள் இங்குள்ளவர்கள்...
இப்பகுதியிலேயே கபாலீஸ்வரர் கோயிலின் பெரிய சொத்து என்பது மயிலாப்பூர் க்ளப் எனும் சொத்துதான்..
இந்த மயிலாப்பூர் க்ளப்...
2011-2021 ல் கடந்த மாதம்வரை மயிலாப்பூர் ரெக்ரியேசன் க்ளப் எனும் பெயரில் பக்கா உயர்தர பார் வசதியுடன் இயங்கி வந்திருக்கிறது...
திமுக ஆட்சிக்கு வந்தபின் இந்து கோவில்கள் சொத்துகளை மீட்கும்  நடவடிக்கையின் ஒரு பகுதியாக வாடகை பாக்கி மற்றும் வாடகை குறைவாக தரும் கடைகளை அப்புறப்படுத்துவது மற்றும் கோவில் இடத்தை ஆக்கிரமித்து உள்ளவர்கள் மீது பல்வேறூ நடவடிக்கைககளை எடுத்து வருகிறது...
அந்த வகையில் கோவில் இடத்தில்  பார் நடத்தி வருவது குறித்து HRNC எனப்படும் இந்து அறநிலையத்துறை சார்பில் .... மயிலாப்பூர் க்ளப்பை நடத்துபவர்களுக்கு நோட்டிஸ் விட்டிருக்கிறது ...
அந்த நோட்டிஸ் கிடைக்கப்பெற்ற இரண்டு மணி நேரத்தில் மயிலாப்பூர் ரெக்ரியேசன் க்ளப்பில் இருந்த பார் காலி செய்யப்பட்டுவிட்டது என... க்ளப்பின் தலைவரும் .. பிரபல  சினிமா தயரிப்பாளருமான பிரமிடு நடராஜன் தமிழ்நாடு அரசுக்கு தகவல் கொடுத்துள்ளார்...
எவ்ளோ கொடுமை பாருங்க..
அந்த சொத்து கோவில் சொத்து..
அதில் நடந்தது சரக்கடிக்கும் பார்..
பாரை நடத்தியது பிராமண பிரபலங்கள்...
இவர்கள்தான் இந்து கோவிலை காப்பாற்ற சொல்கிறவர்கள்...😡
இப்பதிவின் ஆராம்பத்தில் சொன்னதை போல ஏன் இங்கு திமுக தோற்றது ..
அதிமுக ஏன் ஜெயிக்கிறது என்பது தெரிகிறதா ...
இதுதான் காரணம் ...
அதிமுகவின் அனுசரணையோடு கோவில் நிலத்தில் இத்தனை நாட்களும் அக்கிரம காரியங்களை நடத்தி வந்திருக்கின்றனர்...
இதுல கொடுமை என்னனா பிராமணர்களின் கட்சியான பாஜக.. பிராமனர்களின் அதிக வாக்குகள் அதிகமுள்ள தொகுதியான இங்கே தேர்தலில் நின்னா தோத்துடும்...
ஆனா அதுவே அதிமுக நின்னா ஜெயிச்சுடும்..
ஏனெனில் பாஜகவுக்கு ஒட்டு போட்ட வேஸ்ட் ஆகிடும் ..
பாஜகவின் ஆதாரவாளர்களும்.. தங்கள் வாக்கை வீணாக்காமல் அதிமுகவுக்கே வாக்களிப்பார்கள்...
அவர்களை பொறுத்தாவரை பாஜகவும் அதிமுகவும் ஒன்றே..
அவர்களை பொருத்தவரை
திமுக ஜெயிக்காமல் இருந்தாலே போதும்...
அதிமுகவை ஜெயிக்க வச்சு எல்லா காரியமும் சாதிச்சுக்குவார்கள் அவர்கள்...
அதனால்தான் மயிலாப்பூர் அதிமுக வசமாகி வந்தது..
மயிலை க்ளப்கள் அவாக்கள் வசமே இருந்தது..
இப்போ பாருங்க திமுக ஜெயிச்சு ஆட்சிக்கு வந்த பின் இந்து விரோதியான😂 திமுக மயிலாப்பூர் கபாலீஸ்வரர்  கோவில் சொத்துகளை மீட்டு எடுத்து  ஹிந்துக்களுக்கு துரோகம் செய்யுது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக