செவ்வாய், 22 ஜூன், 2021

தமிழ்நாடு பொருளாதார ஆலோசனை குழு! economical evangelist ஆக உலக அளவில் செயல்படுவார்கள்!

May be an image of 7 people and text that says 'ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு நிபுணர்கள் ரகுராம் ராஜன் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ்தர் டஃப்லோ நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியன் ஒன்றிய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஜீன் ட்ரெஸ் ராஞ்சி பல்கலைக்கழகம்; டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் டாக்டர் எஸ் நாராயண் ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் 21-06-2021 வெளியிடு: இயக்குனர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை'

Karthikeyan Fastura  :    இது உண்மையில் மிக அசாதாரணமான முன்னெடுப்பு. ஒன்றிய அரசின் பொருளாதார ஆலோசகர்கள் குழுவை விட மிகச்சிறந்த குழுவாக இது அமைந்திருக்கிறது.
வங்காளத்தின் கிராமிய பொருளாதார நிபுணர்  நோபல் பரிசு பெற்ற அறிஞர் Muhammad Yunus இடம்பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
தமிழ்நாட்டிற்கு என்று பங்குச்சந்தை இருக்குமென்றால் இந்நேரம் இந்த தகவலுக்கு பங்குச்சந்தையில்  ஏற்றம் கண்டிருக்கும்.
முன்பு சென்னையிலும் கோயம்புத்தூரிலும் Madras Stock Exchange  என்ற பெயரில் எக்சேஞ்ச் இருந்தது. 1937ல் BSEக்கு போட்டியாக தெற்கில் இது தொடங்கப்பட்டது.
நன்றாக சென்ற அதை ஒன்றிய அரசு 2015ல் மூடியது. மீண்டும் அதை திறக்க கழகத்தின் ஆட்சி முயற்சிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் தொழில் முதலீட்டிற்கு உலக அளவில் ஒரு கவன ஈர்ப்பை இந்த குழு மிக எளிதாக ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். ஆகவே இவர்கள் உண்மையில் Tamilnadu Government economical evangelist ஆக உலக அளவில் செயல்படுவார்கள்.


இந்தியா மேப்பினை தலைகீழாகப் பிடித்தால் தமிழ்நாடு தான் தலையாக இருக்கும் என்பார்கள். அரசியலில் இது உண்மையாகி கொண்டிருக்கிறது.
அடுத்த பத்து ஆண்டுகள் இந்த ஆட்சியும், அதன் மக்கள் செயல்பாடும் தொடரும் என்றால் தமிழ்நாடு இந்தியாவை வழிநடத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

 

 Muralidharan Pb  :    முதல்வர் மு.க. ஸ்டாலினின் பொருளாதார டீமில் இருக்கும் யார் இந்த ஜான் த்ரே,.?
தமிழகத்தில் தொழில்முதலீடுகளை இவரால் ஈர்க்க முடியுமா.?
ஒவ்வொரு ஆண்டும் கூடும் சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது வழக்கம். அதேபோல், தற்போது தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ளது. இந்த உரையில் தமிழ்நாடு முதலமைச்சருக்கான 'பொருளாதார நிபுணர்கள் ஆலோசனைக்குழு' அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.
ஐந்து பேர் கொண்ட இக்குழுவில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ, ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், ராஞ்சி பல்கலைக்கழகம், ஜான் த்ரே, ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ். நாராயணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதில் ரகுராம் ராஜன் தவிர பிற அனைவரும் பெரும்பாலும் அறியாத முகம் தான். இதில் ஜான் த்ரே என்பவர் முழுக்க முழுக்க வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவேண்டும் என்பதற்காகவே நியமிக்கப்பட்டவர் என்கிறார்கள் பொருளாதாரம் அறிந்தவர்கள்.
பெல்ஜியத்தில் பிறந்த ஜான் த்ரே தற்போது இந்திய குடிமகனாவார். இவர் இலண்டன் பொருளியல் பள்ளியிலும், தில்லி பொருளியல் பள்ளியிலும் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
 இந்திய அரசின் திட்டக்குழுவில் இடம்பெற்ற இவர்  பொருளியல் வளர்ச்சிக்கும், பொதுமக்கள் பொருளியல் வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
இந்தியாவுக்கு பொருளாதார தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், போட்டி சந்தைகளை உருவாக்குதல் போன்றவை நிச்சயம் தேவை என்று வாதிட்ட இவர், ஆனால் இவை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதே முக்கியம் என்றும் இதில் சமூகநீதி மிக முக்கியம் என்றும் கருதுபவர். சமூகநீதி என்றும் கோட்பாடு தான் இவரையும், திமுகவையும் இணைத்துள்ளது.
நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் மற்றும் ஜான் த்ரே ஆகிய இருவர் இணைந்து எழுதிய புத்தகங்கள் உலக அளவில் புகழ்பெற்றது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பெரியளவில் தொழில்முதலீடுகள் ஏதும் வரவில்லை. இதன் காரணமாக தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் இல்லாத சூழல் இருக்கிறது.
இந்நிலையில் தமிழக அரசின் பொருளாதார ஆலோசகராக ஜான் த்ரே நியமிக்கப்பட்டிருப்பது தமிழகம் மேல் தொழில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் என்றும், இதன் காரணமாக வரும்காலங்களில் தமிழகத்தில் தொழில்முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.  
மாலை முரசு....
via பெரியாரிஸ்ட் இலியாஸ்
முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் எல்லா பந்திலும் சிக்ஸர் அடிக்கும் அசத்தல் வீரர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக