புதன், 30 ஜூன், 2021

ஜெய் ஹிந்து செண்பகராமன்! உண்மை வரலாறு என்ன?

May be an image of 1 person

Viduthalai Rajendaran  :  "ஜெய் ஹிந்து’ம் செண்பகராமனும் : உண்மை வரலாறு என்ன?"
     ஆளுநர் உரையை முடிக்கும்போது ‘ஜெய் ஹிந்த்’ என்று இருந்த சொல் நீக்கப்பட்டு விட்டதாம். பா.ஜ.க.வும் மனுவாதிகளும் துள்ளிக் குதிக்கிறார்கள். ‘
ஜெய் ஹிந்த்’ என்ற இந்தி சொல்லுக்கு ஆளுநர் ஆங்கில உரையிலோ அல்லது தமிழ் மொழி பெயர்ப்பிலோ எதற்கு இடம் பெற வேண்டும்?
அப்படி ஒரு சொல் அரசியல் சட்டத்தில் இடம் பெற்றிருக்கிறதா? அதுவும் இல்லை. ‘ஜெய் ஹிந்த்’ என்றால் ‘இந்தியா வாழ்க’ என்று அர்த்தமாம்; மனுவாதிகள் கூறுகிறார்கள்.
‘இந்துக்கள்’ வாழ்க; இந்துஸ்தானி வாழ்க என்பதே அதன் உண்மையான அர்த்தம் என்பதை அந்த சொல்லைக் காதால் கேட்கும் சக்தி உள்ள அனைவருக்குமே தெரியும்.
     திருவனந்தபுரத்தில் தமிழ் வேளாளர் குடும்பத்தில் பிறந்த செண்பகராமன், பள்ளிப் படிப்பின்போது இந்தியாவை இந்து நாடாக்க வேண்டும் என்று அரசியலுக்கு வந்த, பாலகங்காதர திலகரால் ஈர்க்கப்பட்டு, பாரத மாதா வாலிபர் சங்கத்தைத் தோற்றுவித்தவர்.


அப்போது ஜெர்மன் உளவாளியாக சென்னை மாகாணத்தில் செயல்பட்டு வந்த வால்டர் வில்லியம்  ஸ்டிரிக்லாந்து என்பவருடன் தொடர்பை உருவாக்கிக் கொண்டு, ஜெர்மனிக்குப் போனார். இத்தாலி, ஜெர்மனி நாடுகளுக்குப் போய் பொறியியல் கல்வி பயின்றார். பிறகு ஜெர்மன் நாட்டு கப்பல் படையில் சேர்ந்தார். ஜெர்மனி நாட்டுக்காக முதல் உலகப் போரின்போது சென்னை கடற்கரைக்கு வந்த ஜெர்மன் போர்க் கப்பலில் வந்து, சென்னை உயர்நீதி மன்றம் அருகே கடற்கரையில் ‘எம்டன்’ குண்டுகளை வீசியவர் இந்த செண்பகராமன் (௧௯௧௪, செப்.௨௨). தென்னிந்திய கடற்கரைப் பற்றிய விவரங்களை ஜெர்மனிய படைகளுக்கு தந்ததே செண்பகராமன் தான்.
     ‘பர்மா ஷெல்’  எண்ணெய் டாங்குகள் மீது குண்டு வீசியதால் தீப்பிடித்து எரிந்தது. இந்தத் தாக்குதலில் ௩ பேர் உயிரிழந்ததாகவும் ௧௩ பேர் காயமடைந்ததாகவும் சென்னையிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக உயிருக்கு பயந்து நகரைக் காலி செய்து விட்டு வெளியேறியதாகவும் ‘இந்து’ பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த குண்டுவீச்சுகளை நடத்தி விட்டு ஜெர்மனிக்கு திரும்பிய செண்பகராமனுக்கு ஜெர்மன் இராணுவ உயர் அதிகாரிகள் இராணுவ மரியாதையுடன் வரவேற்றனர்.
       ஜெர்மனியுடன் இணைந்து போர் நடத்தி இந்தியாவை பிரிட்டிஷாரிட மிருந்து மீட்டு ‘இந்துஸ்தானை’ உருவாக்க வேண்டும் என்பதே செண்பகராமன் இலட்சியம். கொலை சதி வழக்கில் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். முன்னோடி சாவர்க்கரை சிறையிலிருந்து மீட்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர்.
அந்த செண்பகராமன் தான் ‘ஜெய் ஹிந்த்’ என்று முதன்முதலாக முழங்கினார்; அது தேசபக்தி முழக்கம் என்று எழுதுகிறது ‘மனுவாதி’க் கூட்டம்.  காந்தியார் பேசிய ‘இந்திய விடுதலைக்கு’ நேர் முரணானது. செண்பகராமன் பேசிய ‘இந்து இராஷ்டிரம்’ பார்ப்பன மனுவாதிகள் ஹிட்லரின் ஜெர்மனியர் களுடன் உறவு கொண்டாடிய வரை தேச பக்தராக்கி அவர் முழங்கிய ‘ஜெய் ஹிந்தை’ ‘தேச பக்தி’ முழக்கமாக தூக்கிப் பிடிக்கிறார்கள். ஹிட்லரின் வாரிசுகள் தேச பக்திக்கு பாடம் எடுக்கின்றனர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக