ஞாயிறு, 27 ஜூன், 2021

பல சமயங்களில் திருமணங்களை விட விவாகரத்துகள் புனிதமானவை!

May be an image of 1 person and text that says 'Dear Parents, if your daughter Wants to return to you from Failed Marriages, please welcome her. TRENDING MALLU A Divorced Daughter is better than a Dead Daughter!'

Loganayaki Lona  :   வரதட்சணை கொடுமை என்றதும் ,
எங்களுக்கு அவ நகை வேண்டாம். நாங்க அத ஒன்னும் தொடக்கூட மாட்டோம் .அவங்க நல்லதுக்கு தான் கேட்டு வாங்குனோம்னு சொன்னவங்க (நவீனத்துவம்)
பொண்ணு பார்க்க சுமாரா இருந்தாலும் 10 பவுனுக்கு 15 பவுன் போட்றேன்னு சொன்னதால சரின்னுட்டோம்னு சொன்னவங்க
பொண்ணுக்கு 50 பவுனு பையனுக்கு 5 பவுன் போட்ருங்க,நாங்க பொண்ணுக்கு 7 பவுனா தாலி போட்ருதோம்னு சொன்னவங்க
அவளே லவ் பண்ணிட்டானாலும் நம்ம நகைன்னு ஒன்னும்  போடாமலா அனுப்ப முடியும் ?அவளுக்குனு வாங்குனத கொண்டு போகட்டும்னு அழுதவங்க,
2வருசம் துபாய்ல வேலை செஞ்சு 100 பவுன் சேர்த்திட்டேன்.இனி மேரேஜ் செய்யலாம்னு சொல்ற நாகர்கோவில்,கன்னியாகுமரி பகுதி செவிலியர்கள்
திருமணம்.முடிந்து 1 மாதத்தில் மொத்த நகையும் அடகு வைத்துவிட்டு மீண்டும் நகை வாங்கிட்டு வான்னு அனுப்புறவங்க,
கேரளாவில் போகும் திருமணத்தில் எல்லாம் வெளியில் விலையுயர்ந்த கார்,கழுத்து நிறைய நகைன்னு பெண் மூலம் காட்டப்படும் ப்ரம்மாண்டங்கள்
இதெல்லாம் நினைவுக்கு வந்தது.


இது இல்லாமல் ஒலுசு,சீர் ,பழம் போட்றது பார்க்க வர்றது போறதுன்னு ஒவ்வொரு முறையும் அந்த பெண் வீட்டார்க்கு தான் இங்கு எத்தனை துயர் மிகு வாழ்க்கை.
பிடிக்கலன்னு வந்தா என்ன?மேற்கொண்டு படிக்க வச்சா பொண்ணுங்க ஜம்முனு வாழ்வாங்க..திரும்பி வருவதை சாதாரணமா எடுத்துக்கொள்ள வேண்டும்.
புகுந்த வீட்டுக்குள்ள பிடிச்சு தள்ளி விட்டுட்டு அப்பாடான்னு என்னமோ தூக்கி சுமந்துகிட்டு இருந்தது போல நிம்மதி பெருமூச்சு விடும் முன், எப்போதும் அது உன் வீடு தான் என்ன ப்ரச்சனை என்றாலும் அங்கு எப்போதும் வர உனக்கு உரிமை உண்டுன்னு சொல்லிட்டு வரனும்.
திருமணம் முடிந்தால் 2 வீடும் தனக்கில்லைங்குற அந்த ஒரு எண்ணம் போதும் தற்கொலையை தூண்டிரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக