புதன், 30 ஜூன், 2021

பட்டியியலினத்தவரின் உடலை மயானத்திற்கு கொண்டுசெல்ல வழிமறித்த ஆதிக்க ஜாதி

May be an image of one or more people, outdoors and text that says 'சமூகமும் சமூக நீதியும் பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஒருத்தரோட இறுதி ஊர்வலத்தை, ஊருக்குள்ள கொண்டு போகக்கூடாதுன்னு சொல்லி... ஆத்தை கடந்து, கொண்டு போக வெச்ச அராஜகம்! Cமத உத்திர பிரதேசமோ, பீகாரோ இல்ல... தமிழ்நாட்டுல..! (இடம்- திருவாரூர், குடவாசல் ஒன்றியம், திருவிடச்சேரி)'

M S Rajagopal   :  இடைநிலை சாதிகளின் ஈனபுத்தி!
பெரியார் மண் பெரியார் மண் என்று இடைநிலை சாதியினர் வாய் கிழிய பீற்றிக் கொள்வதில் ஒன்றும் குறைச்சலில்லை.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் திருவிடச்சேரி கிராமத்தில் பட்டியலினத்தவரின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல வழி தர மறுத்திருக்கின்றனர் சில இடைநிலை சாதிகள்.
      பிணத்தை ஆற்றில் இறக்கி ஊரை சுற்றிக் கொண்டு எடுத்து சென்றிருக்கிறார்கள் பட்டியலினத்தவர்.  
        விஏஓ ,ஆர்ஐ ,தாசில்தார், காவல்துறையினர், பஞ்சாயத்து போர்டு கவுன்சிலர், தலைவர் , ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய சேர்மன்  ஆகிய எல்லோரும் அந்த ஊரில் இருக்கிறார்களா.. அல்லது கொரோனாவில் செத்து விட்டார்களா?
       ஒரு பட்டியலின கர்ப்பிணி பெண்ணை அக்ரஹாரம் வழியே ஆஷ் துரை எடுத்து சென்றதால்தான் வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டுக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டான் என்று பேசி மகிழ்ந்த சிகாமணிகள் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?


       மேதகு படங்களை பார்த்து விட்டு புல்லரித்துப் போன செல்லரித்த ஜீவன்கள் இதற்கு என்ன பதில் தரப் போகிறார்கள்?
         மார்க்ஸியம் பெரியாரியம் அம்பேத்காரியம் லெனினியம் என்று எல்லா ஈயத்தையும் காய்ச்சி அற்புத சிலை வடித்து அதில் பெருமை காணும் புரட்சியாளர்களின் எதிர்வினை என்னவாக இருக்கப்போகிறது?
         இந்த பட்டியலின மக்களுக்கு விடிவுகாலம் என்பதாவது எதிர்காலத்தில் இருக்க வாய்ப்பிருக்கிறதா இல்லையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக