புதன், 30 ஜூன், 2021

40 ஏரிகள் மீது கட்டப்பட்ட நகரங்கள், ஊர்கள், பொதுக்கட்டுமானங்கள்

May be an image of ‎text that says '‎BREAKING NEWS SUN NES NEWS "ஆக்கிரமிப்பாக இருந்தால் தாஹ்மஹால் கூட இடிக்கப்படும்!" நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டினால் அது தாஹ்மஹாலாக இருந்தாலும் இடிக்கப்படும்! நாகையில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து ரயில்வே சுரங்க நடைபாதை அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து ۔SETAIL SUNNEWS sunnewslive.in BREAKIN NEWS 30JUN2021‎'‎

Surya Xavier : மதுரை உயர்நீதிமன்றம்! உலகனேரி கண்மாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டது தான்.
இதுசரியா என வழக்குப் போட்டவருக்கு அபராதம் விதித்ததும் நீதிமன்றம் தான்
புதிய பேருந்து நிலையங்கள் என்று அழைப்பது வேறொன்றுமல்ல.  பழைய குளங்களே.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் உள்ள இடத்திற்கு வேய்ந்தான்குளம் என்று பெயர்.
அதன் உண்மையான பெயர் வெயிலுக்கு உகந்த குளம் என்பதுதான்.
சென்னை நகரமே தாங்கல், ஏரி, அணை போன்றவற்றில் தான் உள்ளது. சென்னை நகரையே இடிக்க வேண்டும்.
சென்னையில் நகரமயத்திற்கு இரையான ஏரிகள் இவை.
1.நுங்கம்பாக்கம் ஏரி,
2.தேனாம்பேட்டை ஏரி,
3.வியாசர்பாடி ஏரி,


4.முகப்பேர் ஏரி,
5.திருவேற்காடு ஏரி,
6.ஓட்டேரி,
7.மேடவாக்கம் ஏரி,
8.பள்ளிக்கரணை ஏரி,
9.போரூர் ஏரி,
10.ஆவடி ஏரி,
11.கொளத்தூர் ஏரி,
12.இரட்டை ஏரி,
13.வேளச்சேரி ஏரி,
14.பெரும்பாக்கம் ஏரி,
15.பெருங்களத்தூர் ஏரி(இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்),
16.கல்லு குட்டை ஏரி,
17.வில்லிவாக்கம் ஏரி,
18.பாடிய நல்லூர் ஏரி,
19.வேம்பாக்கம் ஏரி,
20.பிச்சாட்டூர் ஏரி,
21.திருநின்றவூர் ஏரி,
22.பாக்கம் ஏரி,
23.விச்சூர் ஏரி,
24.முடிச்சூர் ஏரி,
24.சேத்துப்பாடு ஏரி (ஸ்பர் டாங்க் - ஸ்பர்டாங்க் ரோடு),
25.செம்பாக்கம் ஏரி,
26.சிட்லபாக்கம் ஏரி
27.போரூர் ஏரி,
28.மாம்பலம் ஏரி,
29.கோடம்பாக்கம் டேங்க் ஏரி,
30. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்,
31. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்.....
32.வேளச்"ஏரி"
33.செம்மஞ்"ஏரி"
34.ரெட்"ஏரி"
35.பொத்"ஏரி"
36.கூடுவாஞ்"ஏரி"
37அடை"ஆறு"(அடர்ந்த ஆறு)
38."அணை"காபுத்தூர்
39.பள்ளிக்கர"அணை"
40.காட்டாங்"குளத்தூர்"
இப்ப புரியுதா? இதுபோக தண்ணீரைத் தாங்கி நின்ற தாங்கல்களும் உண்டு. அவைகளும் அழிக்கப்பட்டன. ஈக்காட்டுத்தாங்கலில் தான் ஊருக்கு உபதேசம் செய்யும் அத்தனைத் தொலைக்காட்சிகளும் உள்ளன.
இங்கு ஆக்கிரமிச்சா இங்கு பேசுங்க.
ஆனா ஊனா தாஜ்மஹாலை இடிக்கிறேன் என்பது சரியா தீர்ப்பன்ஸ்?
ரெம்ப டென்சனாதீக தீர்ப்பன்ஸ்.
டென்சனக் குறைங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக