திங்கள், 14 ஜூன், 2021

திரு.புகழேந்தி அதிமுகவில் இருந்து நீக்கம்! சசிகலாவோடு பேசிய மேலும் பலர் நீக்கம்

 மாலையமலர் :சசிகலாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சென்னையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சட்டமன்ற கட்சி துணைத்தலைவர், கொறடா மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், சசிகலாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், இனி அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.


அதில், கட்சியின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். கட்சியினர் யாரும் அவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுதவிர, தேனி மாவட்ட மீனவர் பிரிவு துணைச் செயலாளர் அழகர்சாமி, முன்னாள் அமைச்சர் எம்.ஆனந்தன், முன்னாள் எம்பி வி.கே.சின்னாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 16 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக