திங்கள், 14 ஜூன், 2021

கிஷோர் கே.சாமி அதிரடி கைது!! சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய...

dhinakaran சென்னை தலைவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பிய யூ-டியூபர் கைது... சென்னை: தலைவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பிய யூ-டியூபர் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டார். பேரறிஞர் அண்ணா. கலைஞர், முதலமைச்சர் ஸ்டாலின் பற்றி தவறான கருத்துக்களை பதிவிட்டதாக புகார் எழுந்தது.newstm.in : சமூக வலைதளங்களில் கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணா,  முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் மீது அவதூறு பரப்பியதாக கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள் பங்கு பெறும் கிஷோர் கே.சாமி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவர் பெரிய தலைவர்கள் மட்டுமல்லாது, மாற்று சிந்தனைக் கொண்ட அரசியல் பிரமுகர்களையும் விமர்சிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் இவர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, முன்னா முதல்வர் அறிஞர் அண்ணா, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் குறித்து சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தி அவதூறான கருத்துக்களை பரப்பி வந்தார்.
இதனையடுத்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் கொடுத்த புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் கிஷோர் கே.சாமியை கைது செய்தனர். நள்ளிரவு கைது செய்யப்பட்ட அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  
கிஷோர் கே சாமியை மாதவரத்தில் நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தி சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக